திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன குடோனில் தீ விபத்து -5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள இருசக்கர வாகன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் என 7 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. திருச்செங்கோடு நாமக்கல் ரோட்டில் பச்சையம்மன் கோயில் எதிரே பாலச்சந்தர் (44) என்பவருக்கு சொந்தமான கவுண்டர் அண்ட் கோ நிறுவனத்தின் இருசக்கர வாகன குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 30-க்கும் மேற்பட்ட பேட்டரி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. […]