32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

October 2026

வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் அருண்ராஜ் உதவி! Breaking News

வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் அருண்ராஜ் உதவி!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கரட்டுப்பாளையத்தில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. தீ விபத்தில் காயமடைந்த ஜோதி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதி, கணவரைப் பிரிந்து தனது பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் இவர், குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு ஜோதி தனது குழந்தைகளுடன் ஓங்காளியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். […]

October 11, 2026 Editor
நாமக்கல் ரயில் நிலைய திறப்பு விழாவில் பரபரப்பு: பாஜக பிரமுகரை ஒருமையில் பேசிய கே.பி. ராமலிங்கம்! Breaking News

நாமக்கல் ரயில் நிலைய திறப்பு விழாவில் பரபரப்பு: பாஜக பிரமுகரை ஒருமையில் பேசிய கே.பி. ராமலிங்கம்!

அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.17 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், அக்கட்சிப் பிரமுகர் ஒருவரை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். நாமக்கல் மக்களவை உறுப்பினர் வி. மாதேஸ்வரன் […]

October 11, 2026 Editor
டெல்லியில் இடதுசாரித் தலைவர்கள் கைது: எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! திருச்செங்கோடு

டெல்லியில் இடதுசாரித் தலைவர்கள் கைது: எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரிக் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கைது […]

October 11, 2026 Editor
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் ஆத்மா சாந்தியடைய திருச்செங்கோட்டில் பித்ரு தர்ப்பண பூஜை! திருச்செங்கோடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் ஆத்மா சாந்தியடைய திருச்செங்கோட்டில் பித்ரு தர்ப்பண பூஜை!

தேசிய சிந்தனை பேரவை சார்பில், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், உலகம் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் திகழ வேண்டியும் பித்ரு தர்ப்பண பூஜை மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. புரட்டாசி மஹாளய பட்ச அமாவாசை நாளில் மூதாதையர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திருச்செங்கோடு தெற்கு கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலய வளாகத்தில் தேசிய சிந்தனை பேரவை சார்பில் பித்ரு தர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய சிந்தனை பேரவை […]

October 11, 2026 Editor
4 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்த பரிசு இந்த வெற்றி! – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேட்டி ராசிபுரம்

4 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்த பரிசு இந்த வெற்றி! – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேட்டி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 3 புதிய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன. வெண்ணந்தூர் பேரூராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டிடம், பட்டணம் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் உள்ளிட்ட 3 புதிய கட்டிடங்களை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட கலெக்டர் மதுபாலன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் […]

October 11, 2026 Editor
திருச்செங்கோட்டில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா! திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தொடங்கி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். மாவட்ட கலெக்டர் லி. மதுபாலன் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இவ்விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 7,302 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை […]

October 11, 2026 Editor
திருச்செங்கோட்டில் அக்டோபர் 13-ம் தேதி மின்தடை: செயற்பொறியாளர் அறிவிப்பு திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் அக்டோபர் 13-ம் தேதி மின்தடை: செயற்பொறியாளர் அறிவிப்பு

திருச்செங்கோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அக்டோபர் 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மின்பகிர்மான வட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு துணை மின்நிலையத்தில், 13.10.2026 அன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என திருச்செங்கோடு இயக்கம் […]

October 11, 2026 Editor
திருச்செங்கோடு அருகே குடிசை வீட்டில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம். திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே குடிசை வீட்டில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கரட்டுப்பாளையம் பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், ஜோதி தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு ஓங்காளியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, வீட்டிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தம்பதியினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து […]

October 11, 2026 Editor
நாமக்கல்லில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – 18-ம் தேதி வரை நடைபெறும். நாமக்கல்

நாமக்கல்லில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – 18-ம் தேதி வரை நடைபெறும்.

பாரதி புத்தகாலயம் சார்பில் நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்று, ஆன்மீகம், அறிவியல், பகுத்தறிவு, நாட்டுப்புறக் கதைகள், மருத்துவம், கல்வி, அரசியல், விடுதலை வீரர்களின் வரலாறு, சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் அக்டோபர் 1-ம் தேதி ரிப்பன் […]

October 1, 2026 Editor
வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாமக்கல்லில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம். நாமக்கல்

வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாமக்கல்லில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்று தேர்தல் ஆணையர்களும் கூட்டாக ஒருமனதாக முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்றும், கருத்து வேறுபாடு ஏற்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் உள்ள நடைமுறைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் […]

October 1, 2026 Editor