32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்

நாமக்கல்லில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – 18-ம் தேதி வரை நடைபெறும். நாமக்கல்

நாமக்கல்லில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – 18-ம் தேதி வரை நடைபெறும்.

பாரதி புத்தகாலயம் சார்பில் நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்று, ஆன்மீகம், அறிவியல், பகுத்தறிவு, நாட்டுப்புறக் கதைகள், மருத்துவம், கல்வி, அரசியல், விடுதலை வீரர்களின் வரலாறு, சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் அக்டோபர் 1-ம் தேதி ரிப்பன் […]

October 1, 2026 Editor
வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாமக்கல்லில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம். நாமக்கல்

வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாமக்கல்லில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்று தேர்தல் ஆணையர்களும் கூட்டாக ஒருமனதாக முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்றும், கருத்து வேறுபாடு ஏற்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் உள்ள நடைமுறைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் […]

October 1, 2026 Editor
கொல்லிமலையில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுத் தடை. நாமக்கல்

கொல்லிமலையில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுத் தடை.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் முழுத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அக்டோபர் 2 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விநியோகித்தல் […]

September 30, 2026 Editor
கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜின் தாயார் உண்ணாவிரதம் இருக்க முயற்சி – நாமக்கல் நீதிமன்றம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். நாமக்கல்

கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜின் தாயார் உண்ணாவிரதம் இருக்க முயற்சி – நாமக்கல் நீதிமன்றம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரியும், தனது மகன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியும், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த யுவராஜின் தாயார் ரத்னத்தை போலீசார் நீதிமன்ற வளாகம் முன்பு தடுத்து நிறுத்தினர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் 2023-ல் உறுதி செய்துள்ளது. பல ஆண்டுகளாக […]

September 30, 2026 Editor
நாமக்கல்லில் அக்.1 முதல் 18 வரை ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’ Breaking News

நாமக்கல்லில் அக்.1 முதல் 18 வரை ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’

நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’வில் குழந்தைகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பங்கேற்று, புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெற வேண்டும் என புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளரும், பாரதி புத்தகாலய பதிப்பாளருமான கே. நாகராஜன் கேட்டுக்கொண்டார். நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா குறித்து, கே. நாகராஜன் மற்றும் ஏற்பாட்டாளர்கள் செப்.30-ம் தேதி […]

September 30, 2026 Editor
அக்.2-ல் நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல். நாமக்கல்

அக்.2-ல் நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார். அரசின் உத்தரவின்படி, அக்டோபர் 2-ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசின் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், டாஸ்மாக் மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி […]

September 29, 2026 Editor
தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் வாபஸ். நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. Breaking News

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் வாபஸ். நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளதால், தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில், நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாளை முதல் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

September 29, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 4 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 4 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 4 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் சி. மதுபாலன், உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வி. காரல்மார்க்ஸ் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) தனி தாசில்தாராக பணியாற்றி வந்த இவர், மோகனூர் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எம். கோவிந்தசாமி – மோகனூர் தாசில்தாராக பணியாற்றி வந்த இவர், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். கே. கீதா – நாமக்கல் மாவட்ட […]

September 28, 2026 Editor
செப்.30-ல் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம். நாமக்கல்

செப்.30-ல் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்.

தமிழக அரசின் வெற்றி பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வரும் செப்.30-ம் தேதி தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் என நாமக்கல் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், மாநில தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் முடிவின்படி, தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளை ஒருநாள் இயக்காமல் நிறுத்தும் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். […]

September 28, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-1, குரூப்-1ஏ தேர்வு – 4,506 பேர் தேர்வு எழுதினர். நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-1, குரூப்-1ஏ தேர்வு – 4,506 பேர் தேர்வு எழுதினர்.

  நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ போட்டித்தேர்வு இன்று நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள டிரினிட்டி மகளிர் கல்லூரி மற்றும் பாப்பிநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் மதுபாலன் நேரில் சென்று தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு […]

September 27, 2026 Editor