32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நம்மவூரு செய்திகள்

நாமக்கல்லில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – 18-ம் தேதி வரை நடைபெறும். நாமக்கல்

நாமக்கல்லில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – 18-ம் தேதி வரை நடைபெறும்.

பாரதி புத்தகாலயம் சார்பில் நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்று, ஆன்மீகம், அறிவியல், பகுத்தறிவு, நாட்டுப்புறக் கதைகள், மருத்துவம், கல்வி, அரசியல், விடுதலை வீரர்களின் வரலாறு, சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் அக்டோபர் 1-ம் தேதி ரிப்பன் […]

October 1, 2026 Editor
வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாமக்கல்லில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம். நாமக்கல்

வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாமக்கல்லில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்று தேர்தல் ஆணையர்களும் கூட்டாக ஒருமனதாக முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்றும், கருத்து வேறுபாடு ஏற்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் உள்ள நடைமுறைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் […]

October 1, 2026 Editor
குமாரபாளையம் புதிய தாசில்தார் கே. கீதா பொறுப்பேற்பு. குமாரபாளையம்

குமாரபாளையம் புதிய தாசில்தார் கே. கீதா பொறுப்பேற்பு.

நிர்வாக காரணங்களுக்காக நாமக்கல் மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த கே. கீதா, குமாரபாளையம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். குமாரபாளையம் தாசில்தாராக பணியாற்றி வந்த சி. பிரகாஷ், நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கே. கீதா இன்று குமாரபாளையம் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துறை […]

October 1, 2026 Editor
பாண்டமங்கலத்தில் நாட்டு வெடி வெடித்து 3 பேர் பலி – வீடு இடிந்து தரைமட்டம். Breaking News

பாண்டமங்கலத்தில் நாட்டு வெடி வெடித்து 3 பேர் பலி – வீடு இடிந்து தரைமட்டம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியில் வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படும் நாட்டு வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டமங்கலம் மைனர் வீரப்பம்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வெடி வெடித்ததில் வீடு இடிந்து சேதமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் சந்தியா என்ற பெண் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அருகில் உள்ள […]

September 30, 2026 Editor
கொல்லிமலையில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுத் தடை. நாமக்கல்

கொல்லிமலையில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுத் தடை.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் முழுத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அக்டோபர் 2 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விநியோகித்தல் […]

September 30, 2026 Editor
கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜின் தாயார் உண்ணாவிரதம் இருக்க முயற்சி – நாமக்கல் நீதிமன்றம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். நாமக்கல்

கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜின் தாயார் உண்ணாவிரதம் இருக்க முயற்சி – நாமக்கல் நீதிமன்றம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரியும், தனது மகன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியும், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த யுவராஜின் தாயார் ரத்னத்தை போலீசார் நீதிமன்ற வளாகம் முன்பு தடுத்து நிறுத்தினர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் 2023-ல் உறுதி செய்துள்ளது. பல ஆண்டுகளாக […]

September 30, 2026 Editor
நாமக்கல்லில் அக்.1 முதல் 18 வரை ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’ Breaking News

நாமக்கல்லில் அக்.1 முதல் 18 வரை ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’

நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’வில் குழந்தைகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பங்கேற்று, புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெற வேண்டும் என புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளரும், பாரதி புத்தகாலய பதிப்பாளருமான கே. நாகராஜன் கேட்டுக்கொண்டார். நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா குறித்து, கே. நாகராஜன் மற்றும் ஏற்பாட்டாளர்கள் செப்.30-ம் தேதி […]

September 30, 2026 Editor
பள்ளிபாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் பாலு காலமானார். குமாரபாளையம்

பள்ளிபாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் பாலு காலமானார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், திமுக பிரமுகருமான பாலு (எ) ‘கொக்கு பாலு’ உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். ஜவுளி மற்றும் நூற்பாலை தொழிலில் ஈடுபட்டு வந்த பாலு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். 1996–2001 மற்றும் 2006–2011 காலகட்டங்களில் ஒன்றியக் குழுத் தலைவராகவும், மற்ற இரு காலகட்டங்களில் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் […]

September 30, 2026 Editor
வருமான வரி ஏய்ப்பு வழக்கு: திருச்செங்கோடு தொழிலதிபருக்கு 2 ஆண்டு ஜெயில், ரூ.7.54 லட்சம் அபராதம். திருச்செங்கோடு

வருமான வரி ஏய்ப்பு வழக்கு: திருச்செங்கோடு தொழிலதிபருக்கு 2 ஆண்டு ஜெயில், ரூ.7.54 லட்சம் அபராதம்.

வருமான வரி கணக்கில் வாடகை வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர். நடேசன் என்பவருக்கு  2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.7.54 லட்சம் அபராதமும் விதித்து கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்செங்கோடு வருமான வரித்துறை அலுவலர் தாக்கல் செய்த இந்த வழக்கை, கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே. சிவக்குமார் விசாரித்தார். வழக்கு விவரங்களின்படி, 2012-13 நிதியாண்டில்  நடேசன் தனது ஒரு […]

September 30, 2026 Editor
மல்லசமுத்திரம் அருகே சட்டவிரோத மது விற்பனை- ஒருவர் கைது. திருச்செங்கோடு

மல்லசமுத்திரம் அருகே சட்டவிரோத மது விற்பனை- ஒருவர் கைது.

மல்லசமுத்திரம் பொன்னியாறு ஓடை பகுதியில்  சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக ஒருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். மல்லசமுத்திரம் பொன்னியாறு ஓடை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒருவர் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அவர் […]

September 29, 2026 Editor