32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு

வருமான வரி ஏய்ப்பு வழக்கு: திருச்செங்கோடு தொழிலதிபருக்கு 2 ஆண்டு ஜெயில், ரூ.7.54 லட்சம் அபராதம். திருச்செங்கோடு

வருமான வரி ஏய்ப்பு வழக்கு: திருச்செங்கோடு தொழிலதிபருக்கு 2 ஆண்டு ஜெயில், ரூ.7.54 லட்சம் அபராதம்.

வருமான வரி கணக்கில் வாடகை வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர். நடேசன் என்பவருக்கு  2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.7.54 லட்சம் அபராதமும் விதித்து கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்செங்கோடு வருமான வரித்துறை அலுவலர் தாக்கல் செய்த இந்த வழக்கை, கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே. சிவக்குமார் விசாரித்தார். வழக்கு விவரங்களின்படி, 2012-13 நிதியாண்டில்  நடேசன் தனது ஒரு […]

September 30, 2026 Editor
மல்லசமுத்திரம் அருகே சட்டவிரோத மது விற்பனை- ஒருவர் கைது. திருச்செங்கோடு

மல்லசமுத்திரம் அருகே சட்டவிரோத மது விற்பனை- ஒருவர் கைது.

மல்லசமுத்திரம் பொன்னியாறு ஓடை பகுதியில்  சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக ஒருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். மல்லசமுத்திரம் பொன்னியாறு ஓடை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒருவர் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அவர் […]

September 29, 2026 Editor
குமரமங்கலத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு

குமரமங்கலத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் குமரமங்கலம் பஸ் ஸ்டாப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 2018-ம் ஆண்டு ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்ட PMJJBY, PMSBY குழு காப்பீட்டுத் திட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர். மேலும், விசைத்தறி உள்ளிட்ட அமைப்புசாரா […]

September 29, 2026 Editor
மல்லசமுத்திரத்தில் வீடுகளுக்கே மதுபானம் ‘டோர் டெலிவரி’? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு திருச்செங்கோடு

மல்லசமுத்திரத்தில் வீடுகளுக்கே மதுபானம் ‘டோர் டெலிவரி’? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், செல்போனில் தொடர்பு கொண்டால் வீடுகளுக்கே மதுபானங்களை ‘டோர் டெலிவரி’ செய்வதாகவும் கூறப்படும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பொன்னியாறு ஓடை பகுதியில் மதுபானம் விற்பனை செய்வதாக கூறப்படும் நபரிடம், போலீசாருக்கு தெரியாமல் எப்படி விற்பனை செய்கிறீர்கள் என ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த நபர், மதுவிலக்கு போலீசாருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மாமூல் […]

September 28, 2026 Editor
திருச்செங்கோடு அருகே மின்சாரம் பாய்ந்து பட்டறை தொழிலாளி உயிரிழப்பு. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே மின்சாரம் பாய்ந்து பட்டறை தொழிலாளி உயிரிழப்பு.

திருச்செங்கோடு அருகே லாரியின் சேஸ்சில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ட்ரில்லிங் மிஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பட்டறை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். குமாரபாளையம் தண்ணீர்பந்தல்பாளையம் விநாயகர் நகரைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் கார்த்தி (44). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கார்த்தி, திருச்செங்கோடு அடுத்த கருவேப்பம்பட்டியில் உள்ள லாரி பட்டறையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பட்டறைக்கு அருகில் உள்ள மற்றொரு பட்டறைக்கு லாரியின் சேஸ்சில் துளையிடும் […]

September 28, 2026 Editor
குமரமங்கலத்தில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தவெகவினர் அஞ்சலி. திருச்செங்கோடு

குமரமங்கலத்தில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தவெகவினர் அஞ்சலி.

திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் தமிழக […]

September 27, 2026 Editor
தனியார் கல்லூரி மாணவர்களின் கோரிக்கை மாநாடு – திருச்செங்கோட்டில் பேரணி திருச்செங்கோடு

தனியார் கல்லூரி மாணவர்களின் கோரிக்கை மாநாடு – திருச்செங்கோட்டில் பேரணி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தனியார் கல்லூரி மாணவர்களின் கோரிக்கை மாநாடு மற்றும் பேரணி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். முன்னதாக, கட்சி அலுவலகத்தில் இருந்து தனியார் கல்லூரி மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். பேரணியில் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும், தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையான ஊதியம் […]

September 27, 2026 Editor
“உள் இடஒதுக்கீடு விவகாரம்… திருச்செங்கோட்டில் அதியமான் காட்டம்!” திருச்செங்கோடு

“உள் இடஒதுக்கீடு விவகாரம்… திருச்செங்கோட்டில் அதியமான் காட்டம்!”

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில், ஆதித்தமிழர் பேரவையின் முன்னாள் நிர்வாகி நீலவேந்தன் நினைவு நாளையொட்டி நாமக்கல் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஆதித்தமிழர் பேரவையின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தமிழரசு வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவை […]

September 27, 2026 Editor
செப்.29ல் உஞ்சனை, முசிறி, இளநகரில் மின் தடை திருச்செங்கோடு

செப்.29ல் உஞ்சனை, முசிறி, இளநகரில் மின் தடை

நாமக்கல் மின்பகிர்மான வட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட உஞ்சனை, முசிறி மற்றும் இளநகர் ஆகிய 110/22 கி.வோ. துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 29.09.2026 செவ்வாய்க்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. உஞ்சனை துணை மின்நிலையம் மின்தடை நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ஆலாங்காட்டுப்புதூர், சத்தியநாயக்கன்பாளையம், ராயர்பாளையம், பூவாழக்குட்டை, […]

September 27, 2026 Editor
காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார். திருச்செங்கோடு

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார்.

காசநோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முழு கால சிகிச்சையையும் தவறாமல் மேற்கொள்வதுடன், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமையில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் அருண்ராஜ், பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை […]

September 10, 2026 Editor