திருச்செங்கோடு
மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட சங்கம் கோரிக்கை.
பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்படுவது போல் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் பாதுகாவலர்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயண வசதி வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும், திருச்செங்கோடு பகுதியில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், அரசு பஸ்களில் […]