32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நம்மவூரு செய்திகள்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் லாரி பாடி பில்டிங் தொழில் பாதிப்பு: அரசு உதவ கோரிக்கை. நாமக்கல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் லாரி பாடி பில்டிங் தொழில் பாதிப்பு: அரசு உதவ கோரிக்கை.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி, சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி பாடி பில்டிங் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, நாமக்கல் லாரி பாடி பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் தங்கவேல் தெரிவித்தார். நாமக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் லாரி பாடி பில்டர்ஸ் அசோசியேசனின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

August 31, 2026 Editor
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்: அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதி. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்: அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதி.

அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமில், போதிய இருக்கை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களது உதவியாளர்களுடன் பங்கேற்றனர். முகாமுக்கு வந்தவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை […]

August 31, 2026 Editor
நாமக்கல்லில் ‘இனித் தமிழ் இயக்கம்’ தொடக்கம்: தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க சகாயம் வலியுறுத்தல். நாமக்கல்

நாமக்கல்லில் ‘இனித் தமிழ் இயக்கம்’ தொடக்கம்: தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க சகாயம் வலியுறுத்தல்.

தமிழ் மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், அதனை மீட்டெடுத்து பாதுகாக்கும் நோக்கில் ‘இனித் தமிழ் இயக்கம்’ முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார். நாமக்கல்லில் நடைபெற்ற ‘இனித் தமிழ் இயக்கம்’ சார்பில் தமிழில் கையெழுத்திடும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று சகாயம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருத ஆதிக்கம் காரணமாக தமிழ் மொழியின் பயன்பாடு மங்கியிருந்தது. இருப்பினும், கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளுக்கு இணையான […]

August 30, 2026 Editor
ராசிபுரம் அருகே வருங்கால மனைவிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய பட்டதாரி வாலிபர். ராசிபுரம்

ராசிபுரம் அருகே வருங்கால மனைவிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய பட்டதாரி வாலிபர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்கும் வகையில், பட்டதாரி வாலிபர் ஒருவர் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அசோக்குமார் மகன் அசோக் சரவணன் (32), பொறியியல் பட்டதாரி. இவருக்கும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்ற வர்ஷினிக்கும் வரும் செப்டம்பர் 17-ம் தேதி சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்கு […]

August 30, 2026 Editor
குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் வார்டு ஆய்வுக்கு மின்சார வாகனம் வழங்க கோரிக்கை. குமாரபாளையம்

குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் வார்டு ஆய்வுக்கு மின்சார வாகனம் வழங்க கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் விஜய கண்ணன் தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர். அப்போது அதிமுக நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணி பேசுகையில், தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து வருவதாகவும், ஆனால் அதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை […]

August 28, 2026 Editor
ராசிபுரம் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம். ராசிபுரம்

ராசிபுரம் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்.

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையம் சார்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மைய நிறுவனத் தலைவர் சிவலிங்கன் தலைமை வகித்தார். இதில் பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், நீண்ட காலமாக நாமகிரிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு […]

August 28, 2026 Editor
ராசிபுரம் அருகே ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக புகார்: ஜேசிபி, டிராக்டர் சிறைபிடிப்பு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக புகார்: ஜேசிபி, டிராக்டர் சிறைபிடிப்பு.

ராசிபுரம் அருகே பூசாரிபாளையத்தில் உள்ள ஏரியில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதாகக் கூறி, ஜேசிபி இயந்திரம் மற்றும் மண் ஏற்றிச் சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் அடுத்த பூசாரிபாளையத்தில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மண் வெட்டி எடுக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஏரியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மண் […]

August 28, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 2 பேர் சஸ்பெண்ட். நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 2 பேர் சஸ்பெண்ட்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களை அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 2 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் (பொறுப்பு) தலைமையில், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதுபாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. விலைக்கு மட்டுமே மதுபானங்களை […]

August 28, 2026 Editor
நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிஎன்ஜி கேஸ் நிரப்பும் மையம் திறப்பு. நாமக்கல்

நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிஎன்ஜி கேஸ் நிரப்பும் மையம் திறப்பு.

நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிஎன்ஜி (CNG) கேஸ் நிரப்பும் மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசு பேருந்துகளுக்கு சிஎன்ஜி கேஸ் நிரப்பும் பணியையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தமிழன் பார்த்திபன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 144 அரசு பேருந்துகள் சிஎன்ஜி கேஸ் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளுக்கான […]

August 28, 2026 Editor
திருச்செங்கோட்டில் பழமையான வணிக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சேதம். 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் பழமையான வணிக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சேதம். 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் ரோட்டில் டிசிஎம்எஸ் எதிரே உள்ள பழமையான வணிக கட்டிடத்தின் கீழ்பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தில் தங்கியிருந்த 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். வேலூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு மாடி கொண்ட பழமையான வணிக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் முன்பகுதியில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும், பின்பகுதி மற்றும் மேல்மாடியில் மேன்சனும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த மேன்சனில் வடமாநிலங்களைச் சேர்ந்த […]

August 28, 2026 Editor