32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Breaking News

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்கள் அறிவிப்பு. Breaking News

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – தென்காசி / செங்கோட்டை தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் (06123) அக்டோபர் 1-ம் தேதி இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தென்காசி சென்றடையும். செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் (06124) அக்டோபர் 4-ம் தேதி மாலை 5.40 மணிக்கு […]

September 30, 2026 Editor
பாண்டமங்கலத்தில் நாட்டு வெடி வெடித்து 3 பேர் பலி – வீடு இடிந்து தரைமட்டம். Breaking News

பாண்டமங்கலத்தில் நாட்டு வெடி வெடித்து 3 பேர் பலி – வீடு இடிந்து தரைமட்டம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியில் வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படும் நாட்டு வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டமங்கலம் மைனர் வீரப்பம்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வெடி வெடித்ததில் வீடு இடிந்து சேதமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் சந்தியா என்ற பெண் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அருகில் உள்ள […]

September 30, 2026 Editor
நாமக்கல்லில் அக்.1 முதல் 18 வரை ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’ Breaking News

நாமக்கல்லில் அக்.1 முதல் 18 வரை ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’

நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’வில் குழந்தைகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பங்கேற்று, புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெற வேண்டும் என புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளரும், பாரதி புத்தகாலய பதிப்பாளருமான கே. நாகராஜன் கேட்டுக்கொண்டார். நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா குறித்து, கே. நாகராஜன் மற்றும் ஏற்பாட்டாளர்கள் செப்.30-ம் தேதி […]

September 30, 2026 Editor
தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் வாபஸ். நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. Breaking News

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் வாபஸ். நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளதால், தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில், நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாளை முதல் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

September 29, 2026 Editor
திருச்செங்கோடு அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழப்பு. Breaking News

திருச்செங்கோடு அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழப்பு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்தும், மொபட்டும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் போயர் தெரு பகுதியைச் சேர்ந்த சேகர்–அமுதா தம்பதியரின் மகள்கள் சுபிதா கலைச்செல்வி (19), நிவேதா (16), தனுஸ்ரீ (13). இவர்களது உறவினரான ரமேஷ்பாபு–வசந்தா தம்பதியரின் மகள் அபிநயா (11). இதில் சுபிதா கலைச்செல்வி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் இரண்டாம் […]

September 4, 2026 Editor
ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்து பெண் படுகாயம்: மயக்க ஊசி செலுத்தி நாயை பிடித்த நகராட்சி ஊழியர்கள். Breaking News

ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்து பெண் படுகாயம்: மயக்க ஊசி செலுத்தி நாயை பிடித்த நகராட்சி ஊழியர்கள்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் நாயை சுற்றிவளைத்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், மயக்க ஊசி செலுத்தி நாயை பாதுகாப்பாக பிடித்துச் சென்றனர். ராசிபுரம் அருகே தொப்பப்பட்டி பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் சுமார் ஒன்றரை வயதுடைய பிட்புல் நாயை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதால், நாயை பராமரிப்பதற்காக ராசிபுரம் ஐந்து கடை பகுதியில் வசிக்கும் தனது நண்பர் […]

September 2, 2026 Editor
பரமத்தி வேலூரில் துணிகரம்: கணவன், மனைவியை கட்டிப்போட்டு 40 சவரன் நகை, ரூ.40 லட்சம் கொள்ளை. Breaking News

பரமத்தி வேலூரில் துணிகரம்: கணவன், மனைவியை கட்டிப்போட்டு 40 சவரன் நகை, ரூ.40 லட்சம் கொள்ளை.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பிலிக்கல்பாளையத்தில் வெல்ல வியாபாரியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், தம்பதியினரை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு, ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிக்கல்பாளையத்தை சேர்ந்த வைரவன் வெல்ல வியாபாரம் செய்து வருகிறார். ஆலையங்களில் இருந்து வெல்லத்தை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வைரவன் […]

August 31, 2026 Editor
ரூ.2 கோடி மோசடி புகார்,  ஈரோடு தனியார் கல்லூரி முதல்வர் கைது. Breaking News

ரூ.2 கோடி மோசடி புகார், ஈரோடு தனியார் கல்லூரி முதல்வர் கைது.

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்றதாக கூறப்படும் மோசடி வழக்கில், ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சியில் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்களுக்கு உறுப்பினர் பதவி […]

August 20, 2026 Editor
கருகும் வெற்றிலை பயிர்கள்: காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நாமக்கல் எம்.பி. கோரிக்கை. Breaking News

கருகும் வெற்றிலை பயிர்கள்: காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நாமக்கல் எம்.பி. கோரிக்கை.

கருகும் நிலையில் உள்ள வெற்றிலை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற, ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என நாமக்கல் தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து ராஜாவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் என 5 பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 16,200 […]

August 18, 2026 Editor
மானிய யூரியாவை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை. Breaking News

மானிய யூரியாவை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை.

நாமக்கல் மாவட்டத்தில் மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரத்தை பதுக்கி வைப்பது, அதிக விலைக்கு விற்பனை செய்வது அல்லது விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது 2,626 மெட்ரிக் […]

August 17, 2026 Editor