32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Month: <span>May 2026</span>

திருச்செங்கோட்டில் திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்: அருந்ததியருக்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்! Breaking News

திருச்செங்கோட்டில் திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்: அருந்ததியருக்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்!

திருச்செங்கோட்டில் திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்: அருந்ததியருக்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அருந்ததியர் சமுதாயத்திற்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரியும், விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் தமிழர் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு இன்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் நிறுவனத் தலைவர் […]

May 27, 2026 Editor
70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை Breaking News

70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை

சென்னை / திருச்செங்கோடு: திருச்செங்கோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். திருச்செங்கோடு தொகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளை காவிரி உபரி நீரால் நிரப்பும் வகையில், காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் 70 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது. பல தேர்தல்களில் இந்தத் […]

May 20, 2026 Editor
காசிக்கு சென்ற 67 பக்தர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல்: அமைச்சர் அருண்ராஜின் துரித நடவடிக்கையால் நிம்மதி! நம்மவூரு செய்திகள்

காசிக்கு சென்ற 67 பக்தர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல்: அமைச்சர் அருண்ராஜின் துரித நடவடிக்கையால் நிம்மதி!

திருச்செங்கோட்டில் இருந்து காசிக்கு ஆன்மீகப் பயணம் சென்ற 67 பக்தர்கள், அமைச்சர் அருண்ராஜின் துரித நடவடிக்கையால் ரயிலைத் தவறவிடாமல் பத்திரமாக ஊர் திரும்பினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 67 பேர், கடந்த 3-ம் தேதி சேலம் வழியாக காசி, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்றனர். தரிசனங்களை முடித்துக் கொண்டு, கடந்த 11-ம் தேதி ஆக்ராவிலிருந்து நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ஆக்ராவைக் கடந்த சிறிது நேரத்தில் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு […]

May 17, 2026 Editor
வேலுமணியுடன் கைகோர்த்த தங்கமணி ‘டிஸ்மிஸ்’! எடப்பாடிக்கு ‘செக்’? மாவட்ட நிர்வாகிகளை வளைக்கப் பாயும் ‘கரன்சி’ வலை! திருச்செங்கோடு

வேலுமணியுடன் கைகோர்த்த தங்கமணி ‘டிஸ்மிஸ்’! எடப்பாடிக்கு ‘செக்’? மாவட்ட நிர்வாகிகளை வளைக்கப் பாயும் ‘கரன்சி’ வலை!

அதிமுகவில் நிலவி வந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிழலாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடியைப் பிரிந்து வேலுமணியுடன் கைகோர்த்துள்ள தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் இழுக்கத் திட்டமிட்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் என அசைக்க முடியாத சக்தியாக இருந்த தங்கமணி, சமீபகாலமாக கட்சித் தலைமையுடன் […]

May 17, 2026 Editor
திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நாமக்கல்

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செங்கோடு சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு கோலாகலமாக நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு மங்கள திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு வகையான வண்ண மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுகந்த குந்தலாம்பிகை சமேத கைலாசநாதர் எழுந்தருளினார். சிவபூதகண வாத்தியங்கள் முழங்க, ‘ஓம் நமச்சிவாய’ கோஷங்களை எழுப்பியவாறு […]

May 17, 2026 Editor
பள்ளி, பஸ் நிலையம் அருகே இயங்கிய டாஸ்மாக் கடை அதிரடி மூடல்: திருச்செங்கோடு மக்கள் நிம்மதி திருச்செங்கோடு

பள்ளி, பஸ் நிலையம் அருகே இயங்கிய டாஸ்மாக் கடை அதிரடி மூடல்: திருச்செங்கோடு மக்கள் நிம்மதி

திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அரசு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் அதிரடியாகப் பூட்டினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, விதிமீறலாகச் செயல்படும் கடைகளைக் கண்டறிந்து அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டவுன் பகுதியில் […]

May 17, 2026 Editor
அரசு துறையில் உண்மையாக உழைப்பவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்- அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை. நாமக்கல்

அரசு துறையில் உண்மையாக உழைப்பவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்- அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை.

பதவியேற்ற பிறகு முதன் முறையாக திருச்செங்கோடு வந்த அமைச்சர் அருண்ராஜ்ஜுக்கு மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, நாமக்கல் எம்.எல்.ஏ திலீப், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகர்  மலர்கொத்து வழங்கி, வரவேற்றனர். தொடர்ந்து, அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் துர்காமூர்த்தி, முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  தமிழக முதல்வர் விஜய் முதல் கையெழுத்தாக, 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம், போதைப்பொருட்கள் தடுப்புப்படை ஆகிய முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்கள். எனவே அரசின் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், அனைத்து துறை அரசு அலுவலர்களும் பணிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான […]

May 17, 2026 Editor
குதிரை பேரத்திற்கு இடமில்லை; நீட் தேர்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: திருச்செங்கோட்டில் அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம் Breaking News

குதிரை பேரத்திற்கு இடமில்லை; நீட் தேர்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: திருச்செங்கோட்டில் அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்

“குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை; நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என திருச்செங்கோட்டில் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருச்செங்கோடு வந்த த.வெ.க., மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளரும், அமைச்சருமான அருண்ராஜ், கூட்டப்பள்ளி மற்றும் ஏமப்பள்ளி ஏரிகளை ஆய்வு செய்தார். கூட்டப்பள்ளி ஏரியில் குப்பைகளை அகற்றுவது மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, “குடியிருப்புப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை ஏற்படும் என்பதால் […]

May 17, 2026 Editor
திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர் திருவிழா: ‘அனுமதியின்றி அன்னதானம் வழங்கக் கூடாது’ – ஆர்டிஓ அறிவுறுத்தல்! நாமக்கல்

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர் திருவிழா: ‘அனுமதியின்றி அன்னதானம் வழங்கக் கூடாது’ – ஆர்டிஓ அறிவுறுத்தல்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் நடைபெற்றது. ஆர்டிஓ லெனின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விழாக்கால பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான தேரோட்ட நிகழ்வுகள் பின்வருமாறு நடைபெறவுள்ளன: மே 16 (இன்று): மாலை 4:30 மணிக்கு பத்திரகாளியம்மன் திருத்தேர் இழுத்தல். மே 30: காலை 10:00 மணிக்கு விநாயகர் தேரும், மாலை 4:00 மணிக்கு செங்கோட்டு வேலவர் தேரும் வடம் பிடித்தல். மே 31 – ஜூன் 2: மூன்று நாட்களுக்கு அர்த்தநாரீஸ்வரர் (பெரிய தேர்) திருத்தேர் […]

May 17, 2026 Editor
உடனடி செய்திகள்