32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

September 2026

வெப்படையில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல். குமாரபாளையம்

வெப்படையில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

வெப்படை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெப்படை பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாதது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், இன்று காலை காலி குடங்களுடன் வெப்படை பிரதான சாலையில் […]

September 11, 2026 Editor
குமாரபாளையம் அருகே குட்டையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை. குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே குட்டையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வறண்டு கிடந்த குட்டையில் பாறையின் மீது ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பழனிகவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நீர் தேக்க குட்டை ஒன்று உள்ளது. வறட்சி காரணமாக தற்போது குட்டை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த குட்டை பகுதியில் மது அருந்துபவர்கள் அடிக்கடி கூடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று குட்டையில் உள்ள பாறையின் மீது அடையாளம் தெரியாத […]

September 10, 2026 Editor
5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். நாமக்கல்

5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

வங்கி துறையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணிபுரியும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள பாகுபாடுகளை நீக்கி நியாயமான முறையில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை (11.09.2026) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பு […]

September 10, 2026 Editor
ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஆன்மீகம்

ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிபட்டி  பண்ணையம்மன் கோயிலில் நடைபெற்ற வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கொழிஞ்சிபட்டி பண்ணையம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ராசிபுரம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார […]

September 10, 2026 Editor
நாமக்கல்லில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி. நாமக்கல்

நாமக்கல்லில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி.

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் நாமக்கல் ஹெரிடேஜ் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் நேதாஜி சிலை பகுதியில் தொடங்கிய பேரணி, உழவர் சந்தை வழியாக சென்று தெப்பக்குளம் பகுதியில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ராஜேஷ்குமார், பள்ளித் தலைவர் கே.பி. சரவணன், […]

September 10, 2026 Editor
ராசிபுரம் அருகே செல்போன் டவர், குடிநீர், சாலை, பட்டா வசதி கோரி எம்.பி.யிடம் கிராம மக்கள் மனு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே செல்போன் டவர், குடிநீர், சாலை, பட்டா வசதி கோரி எம்.பி.யிடம் கிராம மக்கள் மனு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள், செல்போன் டவர், குடிநீர், சாலை வசதி மற்றும் பட்டா வழங்கக் கோரி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்தனர். காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செல்போன் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றும், குடிநீர் மற்றும் சாலை வசதிகளை […]

September 10, 2026 Editor
காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார். திருச்செங்கோடு

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார்.

காசநோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முழு கால சிகிச்சையையும் தவறாமல் மேற்கொள்வதுடன், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமையில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் அருண்ராஜ், பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை […]

September 10, 2026 Editor
திருச்செங்கோட்டில் செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், செல்போனை பார்த்தபடி சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் இருந்து செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் உள்ள கே.எஸ்.ஆர். கல்லூரியில் படித்து வரும் மணிகண்டன், கல்லூரி முடிந்து பேருந்தில் வந்து கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். பின்னர் செல்போனை பார்த்தபடி வீட்டை நோக்கி நடந்து சென்றபோது, […]

September 10, 2026 Editor
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நாமக்கல்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக குடோன் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பி. பாண்டித்துரை தலைமை தாங்கினார். பி. தங்கவேல், டி. தினேஷ், சி. பழனிவேல், ஏ. தங்கராசு, பி. குமார், ஆர். குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் என். வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூலி உயர்வு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு உரிய […]

September 9, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றி அழிப்பு: ஆட்சியர் மதுபாலன் தகவல் திருச்செங்கோடு

நாமக்கல் மாவட்டத்தில் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றி அழிப்பு: ஆட்சியர் மதுபாலன் தகவல்

இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் வட்டம் கொன்னையாறு கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தொடங்கி […]

September 9, 2026 Editor