32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

August 2026

அரிசி விலை ரூ.100-ஐ தாண்டினால் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படும்: ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம். நாமக்கல்

அரிசி விலை ரூ.100-ஐ தாண்டினால் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படும்: ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்.

அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டினால், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறிதளவு விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் கெளமாரி சுதாகர் தெரிவித்தார். நாமக்கல் மாநகர ஹோட்டல் வியாபார சங்கத்தின் 4-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கெளமாரி சுதாகர், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எரிவாயு சிலிண்டர் விலை […]

August 16, 2026 Editor
திருச்செங்கோட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் அருண்ராஜ் Breaking News

திருச்செங்கோட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் அருண்ராஜ்

திருச்செங்கோட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர்களுக்கு ஒரு வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை நேயம் அறக்கட்டளை மற்றும் சண்முகா கல்விக் குழுமங்கள் இணைந்து தொடங்கின. இதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பழம், பிஸ்கட், பன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உணவு […]

August 15, 2026 Editor
நாமக்கல்லில் தண்ணீர் பிடிக்கச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி. நாமக்கல்

நாமக்கல்லில் தண்ணீர் பிடிக்கச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி.

நாமக்கல் மாநகராட்சி சுண்ணாம்புக்கார தெருவில், வீட்டின் அருகே தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த 63 வயது பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த ருக்குமணி (63), இன்று வீட்டின் அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த மின் கம்பத்தின் ஸ்டே கம்பியை எதிர்பாராதவிதமாக தொட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ருக்குமணி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார், […]

August 15, 2026 Editor
ராசிபுரத்தில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த 7 குறவர் பழங்குடியின வீரர்களுக்கு வீரவணக்கம். ராசிபுரம்

ராசிபுரத்தில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த 7 குறவர் பழங்குடியின வீரர்களுக்கு வீரவணக்கம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த 7 குறவர் பழங்குடியின வீரர்களுக்கு ராசிபுரத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வன வேங்கைகள் கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். இதையடுத்து, வன வேங்கைகள் கட்சியினர் மற்றும் பழங்குடியின மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த குறவர் பழங்குடியின வீரர்களின் நினைவாக மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில் […]

August 15, 2026 Editor
ராசிபுரம் அருகே 80 அடி தேசியக் கொடியுடன் 4 கி.மீ. ஊர்வலம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே 80 அடி தேசியக் கொடியுடன் 4 கி.மீ. ஊர்வலம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் கலைக் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில், 80 அடி நீளமுள்ள தேசியக் கொடியை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தியபடி ஈரோடு சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சென்றனர். தொடர்ந்து மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் என்.சி.சி. மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.

August 15, 2026 Editor
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம சபையை முற்றுகையிட்ட பெண்கள். திருச்செங்கோடு

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம சபையை முற்றுகையிட்ட பெண்கள்.

திருச்செங்கோடு அருகே காங்கேயம்பாளையத்தில் 45 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கிராம சபைக் கூட்டத்தை முற்றுகையிட்டனர். கருமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மரவம்பாளையம் மாரியம்மன் கோவில் திடலில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பிடிஓ நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் பூர்ணிமா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கூட்டத்திற்கு வந்து, தங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக […]

August 15, 2026 Editor
எலச்சிபாளையத்தில் சுதந்திர தின விழா: சாதி, மத மோதல்களை தவிர்க்க உறுதிமொழி. திருச்செங்கோடு

எலச்சிபாளையத்தில் சுதந்திர தின விழா: சாதி, மத மோதல்களை தவிர்க்க உறுதிமொழி.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நாமக்கல் மாவட்டக் குழு சார்பில், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் கே.மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் ரஹமத், சேகர், ராஜி, செபஸ்டின், வீரம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மக்கள் மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும்; சாதி, மத மோதல்களை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சுதந்திர தின […]

August 15, 2026 Editor
நாமக்கல்–திருச்செங்கோட்டுக்கு SEZ அந்தஸ்து வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல். திருச்செங்கோடு

நாமக்கல்–திருச்செங்கோட்டுக்கு SEZ அந்தஸ்து வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்.

தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளை சிறப்பு பொருளாதார மண்டலமாக (SEZ) அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். திருச்செங்கோட்டில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, தொழில் வளர்ச்சி தொடர்பாக பேசினார். செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், அதேபோல் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள திருச்செங்கோடு […]

August 15, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 310 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்: கலெக்டர் மதுபாலன் பங்கேற்பு. நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 310 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்: கலெக்டர் மதுபாலன் பங்கேற்பு.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் மாரப்பநாயக்கன்பட்டி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் மதுபாலன் கலந்து கொண்டு தலைமை வகித்தார். கிராமப்புற மக்களிடம் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து […]

August 15, 2026 Editor
திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு: பொதுவிருந்து. திருச்செங்கோடு

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு: பொதுவிருந்து.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான கைலாசநாதர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவிருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, தவெக நகர செயலாளர் நாகராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, அறங்காவலர்கள் பிரபாகரன், ப.சித்ரா வண்ணகண்ணன், தி.இ.அர்த்தநாரி, ப.பச்சியப்பன், உதவி ஆணையர் மா.சின்னதுரை, கண்காணிப்பாளர் சு.கல்பனாதத், ஆய்வர் மா.நவீன்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். […]

August 15, 2026 Editor