32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் அருண்ராஜ்

Editor Published: August 15, 2026 1 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

திருச்செங்கோட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர்களுக்கு ஒரு வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை நேயம் அறக்கட்டளை மற்றும் சண்முகா கல்விக் குழுமங்கள் இணைந்து தொடங்கின. இதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பழம், பிஸ்கட், பன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்படும் நிலையில், அவர்களுடன் தங்கியிருக்கும் உதவியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு திருச்செங்கோட்டின் பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான மானியக் கோரிக்கையின்போது திருச்செங்கோட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

About The Author