செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாநகராட்சி சுண்ணாம்புக்கார தெருவில், வீட்டின் அருகே தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த 63 வயது பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த ருக்குமணி (63), இன்று வீட்டின் அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அருகில் இருந்த மின் கம்பத்தின் ஸ்டே கம்பியை எதிர்பாராதவிதமாக தொட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ருக்குமணி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மின் கம்பத்தின் ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்ததற்கான காரணம் குறித்து போலீசாரும், மின் வாரிய அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.