32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

August 2026

மானிய யூரியாவை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை. Breaking News

மானிய யூரியாவை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை.

நாமக்கல் மாவட்டத்தில் மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரத்தை பதுக்கி வைப்பது, அதிக விலைக்கு விற்பனை செய்வது அல்லது விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது 2,626 மெட்ரிக் […]

August 17, 2026 Editor
நாமக்கல்லில், தொழிலாளர் சட்டங்களை திருத்தக் கோரி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். நாமக்கல்

நாமக்கல்லில், தொழிலாளர் சட்டங்களை திருத்தக் கோரி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் தொழிலாளர்களுக்கு எதிரான சரத்துகளை திருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.ரத்தினம் தலைமை வகித்தார். இதில் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் தொழிலாளர்களுக்கு எதிரானதாக உள்ள சரத்துகளை நீக்கி, பாரதிய மஸ்தூர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்று சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள […]

August 17, 2026 Editor
80 ஆண்டுகளாக வசிக்கும் 37 குடும்பங்களுக்கு பட்டா கோரி பள்ளிபாளையம் மக்கள் போராட்டம். குமாரபாளையம்

80 ஆண்டுகளாக வசிக்கும் 37 குடும்பங்களுக்கு பட்டா கோரி பள்ளிபாளையம் மக்கள் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 37 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அலுவலக நுழைவாயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் […]

August 17, 2026 Editor
குமாரபாளையத்தில் அதிகாலை வீட்டின் முன் நின்ற பைக் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல். குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அதிகாலை வீட்டின் முன் நின்ற பைக் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பல்சர் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. குமாரபாளையம் அருகே சேரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யா. தனியார் செல்போன் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து 11 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது பல்சர் […]

August 17, 2026 Editor
சட்டமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்; சபாநாயகர் அணுகுமுறையை மாற்ற வேண்டும்” – ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழகம்

சட்டமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்; சபாநாயகர் அணுகுமுறையை மாற்ற வேண்டும்” – ஈ.ஆர்.ஈஸ்வரன்

தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் என்றும், சட்டமன்றத்தை நடத்தும் முறையில் சபாநாயகர் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கொமதேக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை தமிழக மக்களுடன் சேர்ந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். தற்போது சட்டமன்ற விவாதங்கள் தொலைக்காட்சி விவாதங்களைப் போன்று விதண்டாவாதமாக நடைபெறுவது வருத்தமளிக்கிறது. சட்டமன்றம் தமிழக மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான மன்றம். அங்கு நடைபெறும் விவாதங்கள் […]

August 17, 2026 Editor
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டுக்கு புதிய மருத்துவத் திட்டங்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு. Breaking News

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டுக்கு புதிய மருத்துவத் திட்டங்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு.

2026–27ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்செங்கோடு தொகுதியின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு புதிய வசதிகள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் Patient Experience Improvement Initiative செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவதற்கான வழிகாட்டி அறிவிப்புப் பலகைகள், காத்திருப்பு வசதிகள், சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் […]

August 17, 2026 Editor
தமிழக சுகாதாரத் துறையில் ரூ.2,997 கோடியில் 115 புதிய திட்டங்கள்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு. Breaking News

தமிழக சுகாதாரத் துறையில் ரூ.2,997 கோடியில் 115 புதிய திட்டங்கள்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையின்போது, 2026–27ம் ஆண்டுக்கான 115 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். மொத்தம் சுமார் ரூ.2,997 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டங்களில் முதியோர் நலம், தாய்-சேய் நலம், குழந்தைகள் நலம், மருத்துவ மனிதவளம் மற்றும் நவீன மருத்துவக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை தமிழ்நாட்டில் முதல்முறையாக 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வருமான உச்சவரம்பு […]

August 17, 2026 Editor
தர்மம் பெற்று சேமித்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சமூக சேவையாளர். நாமக்கல்

தர்மம் பெற்று சேமித்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சமூக சேவையாளர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக சேவையாளர் முத்தையா பூல் பாண்டியன், பொது இடங்களில் தர்மம் பெற்று சேமித்த ரூ.10 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையா பூல் பாண்டியன், தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலனிடம் வழங்கினார். அப்போது, கலெக்டர் மதுபாலன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் எழுந்து நின்று கைத்தட்டி அவரது சேவையை பாராட்டினர். […]

August 17, 2026 Editor
மழையால் மீண்டும் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேந்தமங்கலம்

மழையால் மீண்டும் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமான கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலை, சித்தர்கள் தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவது வழக்கம். கொல்லிமலையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி […]

August 17, 2026 Editor
நாகபஞ்சமி: திருச்செங்கோடு மலையில் 60 அடி உயர ஆதிசேஷ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம். ஆன்மீகம்

நாகபஞ்சமி: திருச்செங்கோடு மலையில் 60 அடி உயர ஆதிசேஷ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

நாகபஞ்சமியை முன்னிட்டு, திருச்செங்கோடு மலையில் அமைந்துள்ள 60 அடி உயர ஆதிசேஷ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருச்செங்கோடு மலையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, 5 தலைகளுடன் 60 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஆதிசேஷ சுவாமி தமிழகத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாகபஞ்சமி நாளில் ஆதிசேஷ சுவாமியை வழிபட்டால் நாகதோஷம், காலசர்ப்ப […]

August 17, 2026 Editor