32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Breaking News

திருச்செங்கோட்டில் பரபரப்பு: 24 ஆண்டுக்கு முந்தைய கூட்டுக்கொள்ளை வழக்கில் டாக்டர் உட்பட 8 பேருக்கு 10 ஆண்டு சிறை! Breaking News

திருச்செங்கோட்டில் பரபரப்பு: 24 ஆண்டுக்கு முந்தைய கூட்டுக்கொள்ளை வழக்கில் டாக்டர் உட்பட 8 பேருக்கு 10 ஆண்டு சிறை!

 திருச்செங்கோட்டில் கடந்த 2002-ஆம் ஆண்டு வீடு புகுந்து பொருட்களை சூறையாடி, கத்தி முனையில் ஆவணங்களில் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கிய வழக்கில், நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்செங்கோடு கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. திருச்செங்கோடு அடுத்த கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவருக்கும் நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் ராஜ்குமார் (54) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் மற்றும் வீடு அடமானம் தொடர்பாக சிவில் வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 2002 ம் ஆண்டு, டாக்டர் ராஜ்குமார் தலைமையில் சுமார் 40 பேர் கொண்ட […]

July 22, 2026 Editor
திருச்செங்கோடு அருகே கிரஷரில் கலெக்டர் திடீர் ஆய்வு! Breaking News

திருச்செங்கோடு அருகே கிரஷரில் கலெக்டர் திடீர் ஆய்வு!

திருச்செங்கோடு அடுத்த கோக்கலை பகுதியில் செயல்பட்டு வரும் கிரஷரில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன், மாவட்டம் முழுவதும் பல்வேறு பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருச்செங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட கோக்கலை பகுதியில் இயங்கி வரும் கிரஷர் ஒன்றில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிரஷரின் செயல்பாடுகள் குறித்தும், அரசு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் […]

July 22, 2026 Editor
சத்திநாயக்கன்பாளையம், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை. Breaking News

சத்திநாயக்கன்பாளையம், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை.

சத்திநாயக்கன்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவில்பாளையம் அம்மன் நகரில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் பஞ்சாயத்து ஆபீசை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு அடுத்த சத்திநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து, கோவில்பாளையம் பகுதியில் உள்ள அம்மன் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட […]

July 22, 2026 Editor
மல்லசமுத்திரம் அருகே வேன் மோதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விழுந்து 2 பேர் பலி! Breaking News

மல்லசமுத்திரம் அருகே வேன் மோதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விழுந்து 2 பேர் பலி!

திருச்செங்கோடு அருகே முட்டை லோடு ஏற்றி வந்த மினி டெம்போ பஞ்சாயத்து டேங்க் மீது மோதிய விபத்தில் டேங்க் சரிந்து விழுந்து டெம்போவில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வையப்பமலையில் இருந்து ஒசூருக்கு முட்டை லோடு ஏற்றிக் கொண்டு மினி டெம்போ சென்றது. டெம்போவை செக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுபாஸ்(29) ஓட்டிச் சென்றார். அவருடன் லோடு மேன் முனியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார்(23) என்பவர் உடன் சென்றார். வாகனம் […]

July 22, 2026 Editor
திருச்செங்கோடு அருகே ரவுண்டானா மீது ஏறி லாரி கவிழ்ந்து விபத்து. Breaking News

திருச்செங்கோடு அருகே ரவுண்டானா மீது ஏறி லாரி கவிழ்ந்து விபத்து.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஊஞ்சப்பாளையம் அவுட்டர் பைபாஸ் ரோடு பகுதியில், நள்ளிரவில் ரவுண்டானா மீது லாரி ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து எள்ளு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி லாரி ஒன்று சென்றது. ராமன் என்பவருக்கு சொந்தமான இந்த லாரியை, சிவானந்தன் என்பவர் ஓட்டி வந்தார். நள்ளிரவு, திருச்செங்கோடு ஊஞ்சப்பாளையம் அவுட்டர் பைபாஸ் ரோடு அருகே லாரி வந்தபோது  உயரம் குறைவாக இருந்த ரவுண்டானா சுவர் […]

July 22, 2026 Editor
திருச்செங்கோட்டில் அதிரடி: அதிக கட்டணம் வசூலித்த பஸ்களில் அதிகாரிகள் சோதனை! Breaking News

திருச்செங்கோட்டில் அதிரடி: அதிக கட்டணம் வசூலித்த பஸ்களில் அதிகாரிகள் சோதனை!

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் பஸ்களில், கடந்த இரு வாரங்களாக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதன் அடிப்படையில், திருச்செங்கோடு ஆர்டிஓ (பொறுப்பு) மாதவன் மற்றும் மோட்டார் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் இணைந்து, திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, அந்த வழியாக வந்த 12-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களை அதிகாரிகள் […]

July 22, 2026 Editor
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.25.45 லட்சம் மருத்துவ உபகரணங்கள்  Breaking News

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.25.45 லட்சம் மருத்துவ உபகரணங்கள் 

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.25.45 லட்சம் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான செக்கை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜிடம் சென்னை தனியார் அமைப்பு நிர்வாகிகள் வழங்கினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜின் முயற்சியால், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்னை அடையார் தனியார் அமைப்பு  சார்பில், சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.25.45 லட்சத்திற்கான செக்கை தனியார் அமைப்பு […]

July 22, 2026 Editor
எலச்சிபாளையம் ஆஸ்பத்திரியில் நர்சுகளை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம். Breaking News

எலச்சிபாளையம் ஆஸ்பத்திரியில் நர்சுகளை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் நர்சுகளை நியமிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகரம் பஞ்சாயத்து பின்புறம் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆஸ்பத்திரியில், ஆதார் மூலம் நோயாளிகளின் வருகைப் பதிவு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை, ஊசி போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பெரும்பாலும் ஒரே நர்சு கவனித்து வருவதால், சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் […]

July 11, 2026 Editor
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் – பல்கலை துணைவேந்தர் தகவல். Breaking News

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் – பல்கலை துணைவேந்தர் தகவல்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் பி.வி.எஸ்சி கால்நடை மருத்தது படிப்புக்கான அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் என பல்கலை துணை வேந்தர் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில், கல்லூரி ஆண்டு விழா மற்றும் ஹாஸ்டல் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் (பொ) நரேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ […]

June 26, 2026 Editor
‘ஊசிகூடபோடமாட்டேங்குறாங்க..!’அமைச்சரிடம்  107 வயதுபாட்டிகண்ணீர்புகார் Breaking News

‘ஊசிகூடபோடமாட்டேங்குறாங்க..!’அமைச்சரிடம்  107 வயதுபாட்டிகண்ணீர்புகார்

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, 107 வயது மூதாட்டி கண்ணீர் மல்க அளித்த புகாரும், ஆஸ்பத்திரியில் ஒரு மாதமாக பிரசவம் நடைபெறாததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், சிறிய பிரச்னைகளுக்குக் கூட திருச்செங்கோடு மற்றும் சேலம் ஜிஹெச் களுக்கு  அனுப்பி வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சுகப்பிரசவங்களை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. […]

June 18, 2026 Editor