32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

எலச்சிபாளையம் ஆஸ்பத்திரியில் நர்சுகளை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்.

Editor Published: July 11, 2026 1 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் நர்சுகளை நியமிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் நர்சுகளை நியமிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகரம் பஞ்சாயத்து பின்புறம் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆஸ்பத்திரியில், ஆதார் மூலம் நோயாளிகளின் வருகைப் பதிவு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை, ஊசி போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பெரும்பாலும் ஒரே நர்சு கவனித்து வருவதால், சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், இந்த ஆஸ்பதிரியில் உடனடியாக கூடுதல் நர்சுகள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், ஆஸ்பத்திரி 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும், நோயாளிகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சி.பி.எம்., மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About The Author

உடனடி செய்திகள்