32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் – பல்கலை துணைவேந்தர் தகவல்.

Editor Published: June 26, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் பி.வி.எஸ்சி கால்நடை மருத்தது படிப்புக்கான அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் என பல்கலை துணை வேந்தர் தெரிவித்தார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில், கல்லூரி ஆண்டு விழா மற்றும் ஹாஸ்டல் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் (பொ) நரேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை ஐஐஆர்எப் தரவரிசைப் பட்டியலில், தேசிய அளவில் அனைத்து கால்நடை மற்றும் மீன்வளக் கல்வி நிறுவனங்களுக்கிடையில் 4வது இடத்தையும், கால்நடை மருத்துவப் பல்கலைகளுக்கிடையில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. கால்நடை மருத்துவ மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டு கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்காக 16 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி உதவிகளை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பி.வி.எஸ்சி கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்காக 20 ஆயிரத்து 100 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, 660 பி.வி.எஸ்சி கால்நடை மருத்துவப் படிப்பு இடங்கள் மற்றும் 100 பி.டெக் இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும். சேலம், தேனி மற்றும் உடுமலைப்பேட்டை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு வெட்னரி கவுன்சிலின் அனுமதி கிடைத்தால் கூடுதலாக 100 இடங்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்க இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. 

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தோல் தொழிற்சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

About The Author