32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நம்மவூரு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட சங்கம் கோரிக்கை. திருச்செங்கோடு

மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட சங்கம் கோரிக்கை.

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்படுவது போல் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் பாதுகாவலர்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயண வசதி வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும், திருச்செங்கோடு பகுதியில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், அரசு பஸ்களில் […]

August 25, 2026 Editor
ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். ஆன்மீகம்

ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

பிரதோஷத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், கரும்புச்சாறு, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் […]

August 25, 2026 Editor
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தக் கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம். நாமக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தக் கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக […]

August 25, 2026 Editor
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் செப்.1 முதல் செல்போன், கேமராவுக்கு தடை. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் செப்.1 முதல் செல்போன், கேமராவுக்கு தடை.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலின் உள் பிரகாரத்தில் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமராக்களை கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலின் உள் பிரகாரத்தில் செல்போன் மற்றும் கேமராக்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக […]

August 25, 2026 Editor
நாமக்கல்லில் ஆக.28-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். நாமக்கல்

நாமக்கல்லில் ஆக.28-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம்.

தனியார் நிறுவனங்களும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலைநாடுநர்களும் நேரடியாக சந்திக்கும் வகையில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. 10-ம் […]

August 25, 2026 Editor
சேந்தமங்கலம் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.17 லட்சம் திருட்டு: 3 பேருக்கு போலீசார் வலை. சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.17 லட்சம் திருட்டு: 3 பேருக்கு போலீசார் வலை.

சேந்தமங்கலம் அருகே அதிமுக மாவட்ட பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் 2 லேப்டாப்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கபாலி (51). அதிமுகவில் நாமக்கல் மாவட்ட பிரதிநிதியாக உள்ள இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. […]

August 25, 2026 Editor
ராசிபுரத்தில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல். ராசிபுரம்

ராசிபுரத்தில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்.

ராசிபுரம் நகரில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜாகீர் உசேன் சாலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு இரவு வீட்டில் தூங்கச் சென்றுள்ளனர். நள்ளிரவில் சுமார் […]

August 25, 2026 Editor
நாமக்கல்லில் தானியங்கி அபராத முறை அமல்: ஏஐ கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு. நாமக்கல்

நாமக்கல்லில் தானியங்கி அபராத முறை அமல்: ஏஐ கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் வகையில் Intelligent Traffic Management System மற்றும் ANPR கேமராக்களுடன் கூடிய Automated Challan System இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. நாமக்கல் சேலம் ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கண்காணிப்பு முறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., முதற்கட்டமாக சேலம் ரோடு சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள ANPR கேமராக்கள் மூலம் வாகனங்களின் […]

August 25, 2026 Editor
கல் குவாரிகளின் எல்லை அளவீடுகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை. நாமக்கல்

கல் குவாரிகளின் எல்லை அளவீடுகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை.

எலச்சிபாளையம் அருகே செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களின் எல்லை அளவீடுகளை அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவில்லை எனக்கூறி, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம் இளையாம்பாளையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஸர்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களை […]

August 25, 2026 Editor
குமாரபாளையத்தில் கனமழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்; வாகன ஓட்டிகள் அவதி. குமாரபாளையம்

குமாரபாளையத்தில் கனமழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்; வாகன ஓட்டிகள் அவதி.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். குமாரபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை, காவேரி நகர், குப்பாண்டபாளையம், […]

August 24, 2026 Editor