32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நம்மவூரு செய்திகள்

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன குடோனில் தீ விபத்து -5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன குடோனில் தீ விபத்து -5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள இருசக்கர வாகன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் என 7 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. திருச்செங்கோடு நாமக்கல் ரோட்டில் பச்சையம்மன் கோயில் எதிரே பாலச்சந்தர் (44) என்பவருக்கு சொந்தமான கவுண்டர் அண்ட் கோ நிறுவனத்தின் இருசக்கர வாகன குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 30-க்கும் மேற்பட்ட பேட்டரி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. […]

August 28, 2026 Editor
நாமக்கல் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. நாமக்கல்

நாமக்கல் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் நேற்று மாலை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷின் அலுவலக அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக […]

August 28, 2026 Editor
திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.4.33 கோடியில் குடியிருப்புகள்- காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய். திருச்செங்கோடு

திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.4.33 கோடியில் குடியிருப்புகள்- காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.

திருச்செங்கோடு சாலப்பாளையம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீயணைப்பு துறை பணியாளர்களுக்காக ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 குடியிருப்புகள் திறக்கப்பட்டன. திருச்செங்கோடு நகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட சாலப்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் நிலைய அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு நிலைய வளாகத்திலேயே குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள சுமார் 56 சென்ட் இடம் தேர்வு […]

August 27, 2026 Editor
திருச்செங்கோடு நகராட்சியில் 4 வகையாக கழிவுகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு. திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகராட்சியில் 4 வகையாக கழிவுகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு.

திருச்செங்கோடு நகராட்சியில் வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, வீடுகளில் சேகரமாகும் கழிவுகளை ஈரக்கழிவு, மக்காத கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் வீட்டு அபாயகரமான கழிவு என நான்கு வகைகளாக பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதன்படி, ஈரக்கழிவுகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத கழிவுகளை ஊதா நிற தொட்டியிலும், சுகாதாரக் […]

August 27, 2026 Editor
ஜேடர்பாளையம் படுகை அணையில் எம்.பி மாதேஸ்வரன் உண்ணாவிரதம். பரமத்திவேலூர்

ஜேடர்பாளையம் படுகை அணையில் எம்.பி மாதேஸ்வரன் உண்ணாவிரதம்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. படுகை அணை நுழைவாயில் எதிரே நடைபெறும் போராட்டத்திற்கு நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமை வகித்து வருகிறார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால், அதன் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக […]

August 27, 2026 Editor
நேபாள வெள்ளத்தில் நாமக்கல் ஓய்வு பெற்ற ஆசிரியை மாயம்? உறவினர்கள் கவலை. நாமக்கல்

நேபாள வெள்ளத்தில் நாமக்கல் ஓய்வு பெற்ற ஆசிரியை மாயம்? உறவினர்கள் கவலை.

கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு தொடர்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் அடுத்த சின்னவேப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேனி (65). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் கடந்த 23-ம் தேதி தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் கைலாயம் செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுள்ளார். சென்னை சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் […]

August 26, 2026 Editor
ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்ற மகளிரணி ஆலோசனைக் கூட்டம். ராசிபுரம்

ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்ற மகளிரணி ஆலோசனைக் கூட்டம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் மாவட்ட மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ‘இயக்கத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர்களின் பணிச்சூழல், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதில், பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பெண் வன்கொடுமை தடுப்புக்கான உள்புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை முறையாகவும் பாரபட்சமின்றியும் […]

August 26, 2026 Editor
ப.வேலூரில் பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி: 50 பேருக்கு வாய்ப்பு. பரமத்திவேலூர்

ப.வேலூரில் பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி: 50 பேருக்கு வாய்ப்பு.

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் பெண்களுக்கான இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், தொழில் தொடங்க ஆர்வமுள்ள 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 50 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு மாத கால இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. ப.வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இப்பயிற்சியில் தையல் பயிற்சியுடன், […]

August 26, 2026 Editor
விஜயகாந்த் பிறந்தநாள்: நாமக்கல் வடக்கு மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம். திருச்செங்கோடு

விஜயகாந்த் பிறந்தநாள்: நாமக்கல் வடக்கு மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் வடக்கு மாவட்டம் முழுவதும் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில், ஆகஸ்ட் 25-ம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், […]

August 26, 2026 Editor
ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.2.75 கோடி மோசடி: ஒருவர் கைது. நாமக்கல்

ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.2.75 கோடி மோசடி: ஒருவர் கைது.

பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு குறைந்த வட்டியில் ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி, ஆவணம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணமாக ரூ.2.75 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருணிடம், மோகனூர் அடுத்த பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (47) அணுகி, குறைந்த வட்டியில் ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக  கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய அருணிடம், கடன் தொகைக்கான […]

August 26, 2026 Editor