
தனியார் நிறுவனங்களும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலைநாடுநர்களும் நேரடியாக சந்திக்கும் வகையில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள், 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் கணினியியல் பயிற்சி (Java, Tally) முடித்தவர்கள் என பல்வேறு கல்வித் தகுதி கொண்ட ஆண், பெண் இருபாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வழங்கப்படும் இலவச திறன் பயிற்சிகளில் சேருவதற்கான பதிவு மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கும், வேலைநாடுநர்களுக்கும் எந்தவித கட்டணமும் இல்லை. வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முகாம் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.