32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நம்மவூரு செய்திகள்

எலச்சிபாளையத்தில் சுதந்திர தின விழா: சாதி, மத மோதல்களை தவிர்க்க உறுதிமொழி. திருச்செங்கோடு

எலச்சிபாளையத்தில் சுதந்திர தின விழா: சாதி, மத மோதல்களை தவிர்க்க உறுதிமொழி.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நாமக்கல் மாவட்டக் குழு சார்பில், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் கே.மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் ரஹமத், சேகர், ராஜி, செபஸ்டின், வீரம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மக்கள் மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும்; சாதி, மத மோதல்களை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சுதந்திர தின […]

August 15, 2026 Editor
நாமக்கல்–திருச்செங்கோட்டுக்கு SEZ அந்தஸ்து வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல். திருச்செங்கோடு

நாமக்கல்–திருச்செங்கோட்டுக்கு SEZ அந்தஸ்து வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்.

தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளை சிறப்பு பொருளாதார மண்டலமாக (SEZ) அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். திருச்செங்கோட்டில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, தொழில் வளர்ச்சி தொடர்பாக பேசினார். செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், அதேபோல் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள திருச்செங்கோடு […]

August 15, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 310 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்: கலெக்டர் மதுபாலன் பங்கேற்பு. நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 310 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்: கலெக்டர் மதுபாலன் பங்கேற்பு.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் மாரப்பநாயக்கன்பட்டி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் மதுபாலன் கலந்து கொண்டு தலைமை வகித்தார். கிராமப்புற மக்களிடம் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து […]

August 15, 2026 Editor
திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு: பொதுவிருந்து. திருச்செங்கோடு

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு: பொதுவிருந்து.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான கைலாசநாதர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவிருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, தவெக நகர செயலாளர் நாகராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, அறங்காவலர்கள் பிரபாகரன், ப.சித்ரா வண்ணகண்ணன், தி.இ.அர்த்தநாரி, ப.பச்சியப்பன், உதவி ஆணையர் மா.சின்னதுரை, கண்காணிப்பாளர் சு.கல்பனாதத், ஆய்வர் மா.நவீன்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். […]

August 15, 2026 Editor
“படித்து முடித்துவிட்டு அரசியலுக்கு வாங்க” – சிறுமியிடம் அண்ணாமலை அறிவுரை. நாமக்கல்

“படித்து முடித்துவிட்டு அரசியலுக்கு வாங்க” – சிறுமியிடம் அண்ணாமலை அறிவுரை.

நாமக்கல்லில் தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற  வி தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலையிடம், சிறுமி ஒருவர் “நானும் உங்களைப் போல அரசியலுக்கு வருகிறேன்” என தெரிவித்த சம்பவம் கவனம் பெற்றது. நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் கடை திறப்பு விழாவில் பாஜக முன்னாள் தலைவர் மற்றும் வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவருக்கு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். விழா முடிந்து வெளியே வந்த அண்ணாமலையை சந்தித்த சிறுமிகள், சுதந்திர […]

August 15, 2026 Editor
ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம். பரமத்திவேலூர்

ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.

ராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பரமத்திவேலூர் அருகே 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் பரமத்திவேலூர், பொத்தனூர், நஞ்சை இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை, […]

August 15, 2026 Editor
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு சிறப்பு திட்டம்: நாமக்கல் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை நாமக்கல்

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு சிறப்பு திட்டம்: நாமக்கல் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு சார்பில் சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப்பிடம் தியாகிகளின் வாரிசுகள் கோரிக்கை விடுத்தனர். நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு உரிய அங்கீகாரமும், அரசு நலத்திட்ட உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் […]

August 15, 2026 Editor
நாமக்கல்லில் 80-வது சுதந்திர தின விழா: 16 பயனாளிகளுக்கு ரூ.33.72 லட்சம் நலத்திட்ட உதவி. நாமக்கல்

நாமக்கல்லில் 80-வது சுதந்திர தின விழா: 16 பயனாளிகளுக்கு ரூ.33.72 லட்சம் நலத்திட்ட உதவி.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, காவல்துறை மற்றும் என்.சி.சி.யைச் சேர்ந்த 60 பேருக்கு பதக்கங்களையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 238 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், 16 பயனாளிகளுக்கு ரூ.33.72 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

August 15, 2026 Editor
ரீல்ஸ், போட்டோ எடுக்க இனி அனுமதி இல்லை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் செல்போனுக்கு தடை. Breaking News

ரீல்ஸ், போட்டோ எடுக்க இனி அனுமதி இல்லை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் செல்போனுக்கு தடை.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருவதால், கோயிலின் அமைதிக்கும், பூஜை முறைகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் முதல்கட்டமாக இன்று முதல் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு […]

August 14, 2026 Editor
ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். ஆன்மீகம்

ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஒரு லட்சம் வெற்றிலைகளைக் கொண்டு அம்மனுக்கு […]

August 14, 2026 Editor