32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

“படித்து முடித்துவிட்டு அரசியலுக்கு வாங்க” – சிறுமியிடம் அண்ணாமலை அறிவுரை.

Editor Published: August 15, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல்லில் தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற  வி தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலையிடம், சிறுமி ஒருவர் “நானும் உங்களைப் போல அரசியலுக்கு வருகிறேன்” என தெரிவித்த சம்பவம் கவனம் பெற்றது.

நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் கடை திறப்பு விழாவில் பாஜக முன்னாள் தலைவர் மற்றும் வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவருக்கு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

விழா முடிந்து வெளியே வந்த அண்ணாமலையை சந்தித்த சிறுமிகள், சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்ததுடன் புத்தகங்களையும் வழங்கினர். அந்த புத்தகங்களில் அண்ணாமலை கையெழுத்திட்டு சிறுமிகளிடம் திருப்பி வழங்கினார்.

அப்போது பிரதீபா என்ற சிறுமி, “நானும் உங்களைப் போல அரசியலுக்கு வருகிறேன்” என உற்சாகமாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட அண்ணாமலை, “நன்றாக படித்துவிட்டு அரசியலுக்கு வாருங்கள்” என சிறுமிக்கு அறிவுரை கூறி பாராட்டினார். தொடர்ந்து அண்ணாமலை, அங்கு வந்திருந்தவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

About The Author