செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு சார்பில் சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப்பிடம் தியாகிகளின் வாரிசுகள் கோரிக்கை விடுத்தனர்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு உரிய அங்கீகாரமும், அரசு நலத்திட்ட உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், தங்களது கோரிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் எம்.எல்.ஏ. திலீப்பிடம் கேட்டுக்கொண்டனர்.
தியாகிகளின் வாரிசுகளின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக எம்.எல்.ஏ. திலீப் உறுதியளித்தார்.