32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நம்மவூரு செய்திகள்

ராசிபுரம் அருகே தொழில் ஆசைகாட்டி விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் மோசடி?. ராசிபுரம்

ராசிபுரம் அருகே தொழில் ஆசைகாட்டி விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் மோசடி?.

ராசிபுரம் அருகே பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி, விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், தங்கராஜ், சுந்தர்ராஜன், பூபதி உள்ளிட்ட விவசாயிகளிடம், புதுச்சத்திரம் அருகே செம்மாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, டிராக்டர் விற்பனை நிலையம், […]

August 22, 2026 Editor
நாமக்கல், நல்லிபாளையம் ஏரி தூர்வாரும் பணி தொடக்கம். நாமக்கல்

நாமக்கல், நல்லிபாளையம் ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டன. ‘மிளிரும் நாமக்கல்’ அமைப்பு சார்பில் நல்லிபாளையம் ஏரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் சி.எஸ்.திலீப், மாநகராட்சி ஆணையாளர் சண்.செல்வபாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஏரியை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் ‘மிளிரும் நாமக்கல்’ அமைப்பின் தலைவர் வி.சத்தியமூர்த்தி, […]

August 22, 2026 Editor
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலத்திட்டங்களை பெற இணையதளத்தில் பதிவு செய்யலாம். நாமக்கல்

கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலத்திட்டங்களை பெற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எளிதாக பெறுவதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை களைந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம் 2022-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கென தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. […]

August 21, 2026 Editor
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பாலிடெக்னிக்கில் ‘பாலிபியஸ்டா’ விழா. திருச்செங்கோடு

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பாலிடெக்னிக்கில் ‘பாலிபியஸ்டா’ விழா.

திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலகத்தில் (பாலிடெக்னிக்) ‘பாலிபியஸ்டா’ விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவில் தொழில்நுட்ப கருத்தரங்கு, ப்ராஜெக்ட் எக்ஸ்போ, கிரிக்கெட், வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், 6ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை சமர்ப்பித்து விளக்கினர். கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.சீனிவாசன், துணைத்தலைவர் […]

August 21, 2026 Editor
ராசிபுரம் அருகே மலைப்பகுதியில் எலும்புக்கூடாக பெண் சடலம்  மீட்பு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே மலைப்பகுதியில் எலும்புக்கூடாக பெண் சடலம் மீட்பு.

ராசிபுரம் அருகே மலைப்பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகி எலும்புக்கூடாக கிடந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் யார், அவர் எவ்வாறு மலைப்பகுதிக்கு வந்தார் என்பது குறித்து பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே வெள்ளைகணவாய் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று துர்நாற்றம் வீசியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு […]

August 21, 2026 Editor
நாமக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம். நாமக்கல்

நாமக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்.

நாடு முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026 குறித்து, நாமக்கல் மாநகராட்சி பகுதியில் விதிகளை முறையாக செயல்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வணிக நிறுவனங்களின் நிர்வாகிகள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடையவர்கள் கலந்து கொண்டனர். இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026 அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் […]

August 21, 2026 Editor
மழை வேண்டி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு. ஆன்மீகம்

மழை வேண்டி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில், பொதுமக்கள் நலன் மற்றும் மழை வேண்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி வறட்சியான சூழல் நிலவி வருவதுடன், வெப்பமும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து, மழை வேண்டி அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வளாகத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலைக்கோயில் வளாகத்தில் நாகர் சன்னதி அருகே உள்ள நல்லீஸ்வரர் சன்னதியில், நந்தியம்பெருமான் நீர் தொட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. […]

August 21, 2026 Editor
திருச்செங்கோடு அருகே கஜசிர விநாயகருக்கு வரலட்சுமி அலங்காரம். ஆன்மீகம்

திருச்செங்கோடு அருகே கஜசிர விநாயகருக்கு வரலட்சுமி அலங்காரம்.

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு அருகே சீத்தாராம்பாளையம் கொள்ளுமேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கஜசிர கணபதி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கஜசிர விநாயகருக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வரலட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பெண்கள் வரலட்சுமி அம்மன் சிலையின் முன்பு புதிய சேலை, மஞ்சள் கயிறு மற்றும் வளையல்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பெண்கள் […]

August 21, 2026 Editor
அக்கலாம்பட்டி கல்குவாரியை மூட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல். திருச்செங்கோடு

அக்கலாம்பட்டி கல்குவாரியை மூட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்.

அக்கலாம்பட்டி பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரி மற்றும் கிரஷர்களால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட கல்குவாரிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பரமத்தி, திருச்செங்கோடு, குமாரபாளையம் தாலுகா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தில் […]

August 21, 2026 Editor
ரூ.2 கோடி மோசடி புகார்,  ஈரோடு தனியார் கல்லூரி முதல்வர் கைது. Breaking News

ரூ.2 கோடி மோசடி புகார், ஈரோடு தனியார் கல்லூரி முதல்வர் கைது.

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்றதாக கூறப்படும் மோசடி வழக்கில், ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சியில் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்களுக்கு உறுப்பினர் பதவி […]

August 20, 2026 Editor