32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு தடை: திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

Editor Published: August 23, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடுவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை கண்டித்து, திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் பணியாற்றிய வட்டாட்சியர், இடதுசாரி தலைவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை சேகரித்து தலைமைச் செயலகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த உத்தரவுக்கு அனுமதி அளித்ததாக கூறப்படும் தமிழக தலைமைச் செயலாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநில குழு உறுப்பினரும் அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டெல்லிபாபு, முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ந.வேலுசாமி, எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ், எம்.ஆர்.முருகேசன், திருச்செங்கோடு நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் துரைசாமி, செல்வராஜ், ரமேஷ், கவிதா, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About The Author