32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

August 2026

வெப்படை காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக வளர்மதி பொறுப்பேற்பு. குமாரபாளையம்

வெப்படை காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக வளர்மதி பொறுப்பேற்பு.

பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக (இன்ஸ்பெக்டர்) வளர்மதி பொறுப்பேற்றுக் கொண்டார். வெப்படை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சங்கீதா, புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட காலிப் பணியிடத்திற்கு, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த வளர்மதி, வெப்படை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய இன்ஸ்பெக்டராக வளர்மதி பொறுப்பேற்றுக் கொண்டு, காவல் நிலையத்தின் பணிகளை மேற்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் […]

August 19, 2026 Editor
திருச்செங்கோடு அருகே மளிகைக் கடையில் குட்கா விற்பனை: 10 கிலோ பறிமுதல்; ஒருவர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே மளிகைக் கடையில் குட்கா விற்பனை: 10 கிலோ பறிமுதல்; ஒருவர் கைது.

திருச்செங்கோடு அருகே மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கருவேப்பம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக் கடையில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். […]

August 19, 2026 Editor
ராசிபுரம் அருகே அரசு பள்ளி விவகாரம்: 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகை. ராசிபுரம்

ராசிபுரம் அருகே அரசு பள்ளி விவகாரம்: 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகை.

ராசிபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ராஜா–சசிகலா தம்பதியின் 2 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் மாணவர்களுக்கு அதிகளவில் வீட்டுப்பாடம் வழங்கப்படுவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் […]

August 18, 2026 Editor
ஆவணி சஷ்டியை முன்னிட்டு ராசிபுரம் பாலமுருகன் கோயிலில் 108 சங்கு அபிஷேகம். ஆன்மீகம்

ஆவணி சஷ்டியை முன்னிட்டு ராசிபுரம் பாலமுருகன் கோயிலில் 108 சங்கு அபிஷேகம்.

ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு, ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகன் மற்றும் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் […]

August 18, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் 33 பணியிடங்கள்: ஆக.31-க்குள் விண்ணப்பிக்கலாம். நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் 33 பணியிடங்கள்: ஆக.31-க்குள் விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள 33 பணியிடங்கள், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இதன்படி, பதவி பணியிடங்கள் சுகாதார ஆய்வாளர் – Gr.II (MPHW) (ஆண்) / Multipurpose Health Worker (Male) – Health Inspector Grade II 30 மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant) 1 ஆடியாலஜிஸ்ட் […]

August 18, 2026 Editor
கருகும் வெற்றிலை பயிர்கள்: காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நாமக்கல் எம்.பி. கோரிக்கை. Breaking News

கருகும் வெற்றிலை பயிர்கள்: காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நாமக்கல் எம்.பி. கோரிக்கை.

கருகும் நிலையில் உள்ள வெற்றிலை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற, ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என நாமக்கல் தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து ராஜாவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் என 5 பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 16,200 […]

August 18, 2026 Editor
திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி மூலம் சிக்கிய ‘போலி போலீஸ்’. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி மூலம் சிக்கிய ‘போலி போலீஸ்’.

  திருச்செங்கோட்டில் பியூட்டி பார்லர் உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை திருடியதாக 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி அவரை போலீசார் பிடித்தனர். திருச்செங்கோடு மாங்குட்டைபாளையத்தைச் சேர்ந்த கௌசல்யா (32), அண்ணா சாலையில் உள்ள மெடிக்கல் ஸ்டோர் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் […]

August 18, 2026 Editor
உயர்கல்வியில் சேராத மாணவர்கள் சேர்க்கை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்: நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு. நாமக்கல்

உயர்கல்வியில் சேராத மாணவர்கள் சேர்க்கை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்: நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்தும் இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்கள், கல்லூரிகளில் சேர்க்கை பெற உதவி தேவைப்பட்டால் 1800 599 4286 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார். நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி சேர்க்கை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்தார். இதில் நாமக்கல், கொல்லிமலை, மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் […]

August 18, 2026 Editor
41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தக் கோரி நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம். நாமக்கல்

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தக் கோரி நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை மனு அனுப்பும் இயக்கத்தை மேற்கொண்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், நாமக்கல்–மோகனூர் சாலையில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் த.ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகள் குறித்து பேசினார். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை பிறப்பிக்க […]

August 18, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 20-ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம். நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 20-ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான கூட்டம், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அதேபோல், திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்கான கூட்டம், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் காலை 11 மணிக்கு திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் […]

August 17, 2026 Editor