32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Month: <span>August 2026</span>

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதி: 5-வது நாளில் பூபதியின் உண்ணாவிரதம் வாபஸ். திருச்செங்கோடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதி: 5-வது நாளில் பூபதியின் உண்ணாவிரதம் வாபஸ்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலரும் விவசாயியுமான பூபதி மேற்கொண்ட தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 5-வது நாளில் முடிவுக்கு வந்தது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி, பள்ளபாளையம் ஏரி, பெரியமணலி மற்றும் சேர்வம்பட்டி பெரியகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அவற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர […]

August 12, 2026 Editor
திருச்செங்கோட்டில் மறைந்து போன தெரு பெயர் பலகைகள்; போஸ்டர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை Breaking News

திருச்செங்கோட்டில் மறைந்து போன தெரு பெயர் பலகைகள்; போஸ்டர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள தெரு, வீதி மற்றும் முக்கிய சாலைகளுக்கான பெயர் பலகைகளில் சினிமா மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், பெயர்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்செங்கோடு நகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் ரூபாய் செலவில் இந்த பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கும், வெளியூரில் இருந்து நகருக்கு வருபவர்களுக்கும் குறிப்பிட்ட தெருக்கள் மற்றும் வீதிகளை எளிதில் அடையாளம் காணவும், முகவரிகளை கண்டறியவும் […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் அங்கன்வாடி மையங்களுக்கு கெட்டுப்போன, எடை குறைவான முட்டைகள்? – ஊழியர்கள் புகார் நாமக்கல்

நாமக்கல்லில் அங்கன்வாடி மையங்களுக்கு கெட்டுப்போன, எடை குறைவான முட்டைகள்? – ஊழியர்கள் புகார்

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போன நிலையிலும், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட குறைவாகவும் விநியோகிக்கப்படுவதாக அங்கன்வாடி ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வந்த முட்டைகளில் சில கெட்டுப்போன நிலையிலும், எடை குறைவாகவும் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், வாரந்தோறும் கெட்டுப்போன முட்டைகள் அதிகளவில் வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் ‘திரங்கா யாத்திரை’ நாமக்கல்

நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் ‘திரங்கா யாத்திரை’

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ‘திரங்கா யாத்திரை’ நடைபெற்றது. பா.ஜ.க. நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி. சரவணன் தலைமையில் நடைபெற்ற தேசியக்கொடி பேரணி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து பேரணி நாமக்கல் கடைவீதி வழியாக சென்று பூங்கா சாலை நுழைவுவாயில் பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர். 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் ரூ.23 லட்சம் மதிப்பிலான 4.27 டன் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு நாமக்கல்

நாமக்கல்லில் ரூ.23 லட்சம் மதிப்பிலான 4.27 டன் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், ரூ.23 லட்சம் மதிப்பிலான 4,127 கிலோபுகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2023 முதல் 2025-ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில், மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், நாமக்கல் டி.எஸ்.பி. […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி. நாமக்கல்

நாமக்கல்லில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்ற பேரணி, “REJECT MODI DELIMITATION – நியாயமான பிரதிநிதித்துவத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்றது. தமிழகத்தின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நியாயமான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய […]

August 12, 2026 Editor
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார்: நல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டார். பரமத்திவேலூர்

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார்: நல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டார்.

நாமக்கல் மாவட்டம், நல்லூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கங்காதரன், ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டதாக கூறப்படுகிறது. நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடந்தை சாலப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சௌமியராஜ் என்பவருக்கும், அவரது பக்கத்து நிலத்துக்காரரான முத்துசாமிக்கும் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. […]

August 12, 2026 Editor
நான்கு ஆண்டுகளாக மோசமான நிலையில் சாலை; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை. குமாரபாளையம்

நான்கு ஆண்டுகளாக மோசமான நிலையில் சாலை; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

பள்ளிபாளையம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகாடு சாலை கடந்த 4 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகாடு பகுதியில் உள்ள சுமார் 1,200 மீட்டர் நீளமுள்ள சாலையை சீரமைக்கக் கோரி, கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். இதையடுத்து சாலையை அதிகாரிகள் நேரில் அளவீடு […]

August 12, 2026 Editor
நீர்நிலையை காக்கக் கோரி 5-வது நாளாக தனிநபர் உண்ணாவிரதம்; திருச்செங்கோட்டில் பரபரப்பு Breaking News

நீர்நிலையை காக்கக் கோரி 5-வது நாளாக தனிநபர் உண்ணாவிரதம்; திருச்செங்கோட்டில் பரபரப்பு

நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி, திருச்செங்கோடு அருகே சமூக ஆர்வலர் ஒருவர் 5-வது நாளாக தனிநபர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்செங்கோடு தாலுகா, புத்தூர் கீழ்முகம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 56/3A இடம் அரசு ஆவணங்களில் நீர்நிலையாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இடத்தில் வண்டல் மண் கொட்டுவதற்கு திருச்செங்கோடு தாசில்தார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நீர்நிலையாக பதிவாகியுள்ள இடத்தில் மண் கொட்ட அனுமதி வழங்கியது சட்ட விதிகளுக்கும், நீர்நிலை பாதுகாப்பு கொள்கைக்கும் எதிரானது எனவும் […]

August 11, 2026 Editor
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு; தேரை இழுத்து பக்தர்கள் தரிசனம் ஆன்மீகம்

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு; தேரை இழுத்து பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் உடனமர் தர்மசம்வர்த்தினி தாயார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர், நந்தி பகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு வெள்ளிக்காப்பு மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி […]

August 10, 2026 Editor
உடனடி செய்திகள்