32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரம்

ராசிபுரம் நகர மன்ற கூட்டத்தில் 16 தீர்மானங்களுக்கு எதிர்ப்பு. ராசிபுரம்

ராசிபுரம் நகர மன்ற கூட்டத்தில் 16 தீர்மானங்களுக்கு எதிர்ப்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவர் கவிதா சங்கர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தங்களது வார்டுகளில் நிலவும் குடிநீர், சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து நகர மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, கூட்டத்தில் புதிதாக 32 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் பாதாள சாக்கடை திட்ட பராமரிப்புப் […]

September 28, 2026 Editor
ராசிபுரத்தில் 2 நாள் இலவச மருத்துவ முகாம் – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு. ராசிபுரம்

ராசிபுரத்தில் 2 நாள் இலவச மருத்துவ முகாம் – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் இரண்டு நாட்கள் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மற்றும் இன்றும் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை, மருத்துவமனையின் நிறுவனர் வேந்தர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். முகாமில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். காது, மூக்கு, தொண்டை, சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் […]

September 27, 2026 Editor
ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஆன்மீகம்

ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிபட்டி  பண்ணையம்மன் கோயிலில் நடைபெற்ற வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கொழிஞ்சிபட்டி பண்ணையம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ராசிபுரம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார […]

September 10, 2026 Editor
ராசிபுரம் அருகே செல்போன் டவர், குடிநீர், சாலை, பட்டா வசதி கோரி எம்.பி.யிடம் கிராம மக்கள் மனு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே செல்போன் டவர், குடிநீர், சாலை, பட்டா வசதி கோரி எம்.பி.யிடம் கிராம மக்கள் மனு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள், செல்போன் டவர், குடிநீர், சாலை வசதி மற்றும் பட்டா வழங்கக் கோரி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்தனர். காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செல்போன் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றும், குடிநீர் மற்றும் சாலை வசதிகளை […]

September 10, 2026 Editor
ராசிபுரத்தில் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி விசிக ஆர்ப்பாட்டம். ராசிபுரம்

ராசிபுரத்தில் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி விசிக ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி பகுதியில் ஆதிதிராவிடர் தெருவில் அமைந்துள்ளதாக கூறப்படும் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக மாவட்ட செயலாளர் சுடரழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்போது, சம்பந்தப்பட்ட […]

September 7, 2026 Editor
அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்: தனியார் பேருந்துகளுக்கும் மானியம் வழங்கினால் இலவச சேவை – உரிமையாளர்கள். ராசிபுரம்

அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்: தனியார் பேருந்துகளுக்கும் மானியம் வழங்கினால் இலவச சேவை – உரிமையாளர்கள்.

அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் வழங்கப்படுவது போல், தனியார் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கும் அரசு மானியம் வழங்கினால், அவர்களையும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க தயாராக இருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தனியார் பேருந்து சங்க முன்னாள் பொருளாளரும், பேருந்து உரிமையாளருமான சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு […]

September 4, 2026 Editor
ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்து பெண் படுகாயம்: மயக்க ஊசி செலுத்தி நாயை பிடித்த நகராட்சி ஊழியர்கள். Breaking News

ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்து பெண் படுகாயம்: மயக்க ஊசி செலுத்தி நாயை பிடித்த நகராட்சி ஊழியர்கள்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் நாயை சுற்றிவளைத்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், மயக்க ஊசி செலுத்தி நாயை பாதுகாப்பாக பிடித்துச் சென்றனர். ராசிபுரம் அருகே தொப்பப்பட்டி பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் சுமார் ஒன்றரை வயதுடைய பிட்புல் நாயை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதால், நாயை பராமரிப்பதற்காக ராசிபுரம் ஐந்து கடை பகுதியில் வசிக்கும் தனது நண்பர் […]

September 2, 2026 Editor
ராசிபுரம் அருகே வருங்கால மனைவிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய பட்டதாரி வாலிபர். ராசிபுரம்

ராசிபுரம் அருகே வருங்கால மனைவிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய பட்டதாரி வாலிபர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்கும் வகையில், பட்டதாரி வாலிபர் ஒருவர் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அசோக்குமார் மகன் அசோக் சரவணன் (32), பொறியியல் பட்டதாரி. இவருக்கும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்ற வர்ஷினிக்கும் வரும் செப்டம்பர் 17-ம் தேதி சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்கு […]

August 30, 2026 Editor
ராசிபுரம் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம். ராசிபுரம்

ராசிபுரம் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்.

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையம் சார்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மைய நிறுவனத் தலைவர் சிவலிங்கன் தலைமை வகித்தார். இதில் பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், நீண்ட காலமாக நாமகிரிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு […]

August 28, 2026 Editor
ராசிபுரம் அருகே ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக புகார்: ஜேசிபி, டிராக்டர் சிறைபிடிப்பு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக புகார்: ஜேசிபி, டிராக்டர் சிறைபிடிப்பு.

ராசிபுரம் அருகே பூசாரிபாளையத்தில் உள்ள ஏரியில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதாகக் கூறி, ஜேசிபி இயந்திரம் மற்றும் மண் ஏற்றிச் சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் அடுத்த பூசாரிபாளையத்தில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மண் வெட்டி எடுக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஏரியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மண் […]

August 28, 2026 Editor