32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Editor Published: September 10, 2026 1 நிமிட வாசிப்பு ஆன்மீகம்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிபட்டி  பண்ணையம்மன் கோயிலில் நடைபெற்ற வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கொழிஞ்சிபட்டி பண்ணையம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் ராசிபுரம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரின் வடத்தை பிடித்து இழுத்துச் சென்றனர். தேரின் முன்னால் ஆண்கள் மற்றும் பெண்கள் பாரம்பரிய கிராமிய நடனமாடியபடி சென்றனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். திருத்தேர் விழாவையொட்டி கொழிஞ்சிபட்டி பகுதியில் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

About The Author