32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரத்தில் 2 நாள் இலவச மருத்துவ முகாம் – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.

Editor Published: September 27, 2026 1 நிமிட வாசிப்பு ராசிபுரம்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் இரண்டு நாட்கள் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மற்றும் இன்றும் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை, மருத்துவமனையின் நிறுவனர் வேந்தர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

முகாமில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

காது, மூக்கு, தொண்டை, சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும், முகாமில் இசிஜி, எக்கோ, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டதுடன், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு இலவசமாக மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

About The Author