32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நம்மவூரு செய்திகள்

பெற்றோரிடம் ஆவணங்கள் இருந்தும் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல். நாமக்கல்

பெற்றோரிடம் ஆவணங்கள் இருந்தும் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியப் பகுதிகளில் வசிக்கும் ரெட்டி (கஞ்சம்) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பெற்றோரிடம் உரிய ஆவணங்கள் இருந்தும் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ரெட்டி (கஞ்சம்) சமூகத்தினர் தமிழ்நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுதொடர்பாக 1981-ம் ஆண்டு சமூக நலத்துறை அரசாணை எண் 541 உள்ளிட்ட பல்வேறு […]

August 20, 2026 Editor
ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதம். பரமத்திவேலூர்

ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதம்.

ராஜவாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, அனைத்து பாசன விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பரமத்தி வேலூரில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ராஜவாய்க்கால் மற்றும் அதனைச் சார்ந்த பாசன வாய்க்கால்களை நம்பி வெற்றிலை, வாழை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, கோரை உள்ளிட்ட பயிர்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பாசன வாய்க்கால்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தண்ணீர் […]

August 20, 2026 Editor
ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி வணிகர்கள் கடையடைப்பு. பரமத்திவேலூர்

ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி வணிகர்கள் கடையடைப்பு.

ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பரமத்தி வேலூரில் வணிகர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு வழங்கப்பட்டு வந்த பாசன நீர், கடந்த 22 நாட்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ராஜவாய்க்கால் பாசனத்தை […]

August 20, 2026 Editor
ராசிபுரம் அருகே மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை. ராசிபுரம்

ராசிபுரம் அருகே மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை.

ராசிபுரம் அருகே மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நாமக்கல் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (41). இவர் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவருக்கும் சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா (20) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், கணவன்–மனைவி இடையே […]

August 20, 2026 Editor
திருச்செங்கோட்டில், தவெக சார்பில் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள் அனுசரிப்பு. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில், தவெக சார்பில் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள் அனுசரிப்பு.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள் திருச்செங்கோட்டில் அனுசரிக்கப்பட்டது. திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தவெக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர்கள் இப்ராஹிம், நாகராஜ், ஒன்றியச் செயலாளர்கள் சக்திவேல், உதயகுமார், குணசேகரன், விக்னேஷ், மல்லசமுத்திரம் கந்தசாமி, கிருஷ்ணன், தனபால், பிரசாந்த், மல்லசமுத்திரம் முத்துசாமி, வழக்கறிஞர் சதீஷ்குமார், செல்வகுமரன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து […]

August 20, 2026 Editor
குமாரபளையத்தில் சாலையோரம் வீசப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் பொதுமக்கள் அச்சம். குமாரபாளையம்

குமாரபளையத்தில் சாலையோரம் வீசப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் பொதுமக்கள் அச்சம்.

குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரை சாலையோரத்தில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பின்றி வீசப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த பாலம், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு […]

August 20, 2026 Editor
நாமக்கல்லில் ,ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு: போலீசார் வித்தியாசமான விழிப்புணர்வு. நாமக்கல்

நாமக்கல்லில் ,ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு: போலீசார் வித்தியாசமான விழிப்புணர்வு.

நாமக்கல் கோட்டை ரோடு சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போலீசார் பாராட்டி, அவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வரவேற்றனர். நாமக்கல் நகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோட்டை ரோடு சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் […]

August 20, 2026 Editor
நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு. நாமக்கல்

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு.

நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கே.பி.சரவணன் தலைமை வகித்தார். தொடர்ந்து, ஒண்டிவீரனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பட்டியலின மாவட்ட தலைவர் ஆர்.பி.தமிழரசு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராம்குமார், வழக்கறிஞர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் […]

August 20, 2026 Editor
திருச்செங்கோடு அருகே பேக்கரி கடையில் குட்கா விற்பனை: 5 கிலோ பறிமுதல்; ஒருவர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே பேக்கரி கடையில் குட்கா விற்பனை: 5 கிலோ பறிமுதல்; ஒருவர் கைது.

திருச்செங்கோடு அருகே பேக்கரி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். […]

August 20, 2026 Editor
சேந்தமங்கலம் ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணி தீவிரம். சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணி தீவிரம்.

சேந்தமங்கலம் பேரூராட்சியில் முக்கிய சந்திப்பாக விளங்கும் ரவுண்டானாவை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகே வண்டிப்பேட்டை பகுதியில் மூன்று வழிச்சாலை சந்திப்பு அமைந்துள்ளது. நாமக்கல், ராசிபுரம், புதுச்சந்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த வழித்தடம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்நிலையில், சேந்தமங்கலம் பேரூராட்சி […]

August 20, 2026 Editor