32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரம் அருகே மலைப்பகுதியில் எலும்புக்கூடாக பெண் சடலம் மீட்பு.

Editor Published: August 21, 2026 1 நிமிட வாசிப்பு ராசிபுரம்
எழுத்து அளவு:

ராசிபுரம் அருகே மலைப்பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகி எலும்புக்கூடாக கிடந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் யார், அவர் எவ்வாறு மலைப்பகுதிக்கு வந்தார் என்பது குறித்து பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே வெள்ளைகணவாய் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று துர்நாற்றம் வீசியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மலைப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டனர். அப்போது, அங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில், எலும்புக்கூடாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் யார்? போலீசார் விசாரணை

மீட்கப்பட்ட பெண் யார் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் எவ்வாறு மலைப்பகுதிக்கு வந்தார், தனியாக வந்தாரா அல்லது யாரேனும் அழைத்து வந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், பெண் கொலை செய்யப்பட்டு மலைப்பகுதியில் வீசப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் பேளுக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை மற்றும் விசாரணையின் முடிவில் பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About The Author