32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்

நாமக்கல் அரசு மகளிர் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி. நாமக்கல்

நாமக்கல் அரசு மகளிர் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் கே.கே.பி தொழில் நிறுவனங்கள் சார்பில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு விதைப் பந்துகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் அடுப்பில்லா சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் […]

September 2, 2026 Editor
நாமக்கல்லில் ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம். நாமக்கல்

நாமக்கல்லில் ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வானி சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். சாதிய பாகுபாடு மற்றும் சமூக அநீதிக்கு எதிராக குரல் எழுப்பிய […]

September 1, 2026 Editor
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் போட்டோ, வீடியோ எடுக்க தடை. ஆன்மீகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் போட்டோ, வீடியோ எடுக்க தடை.

  நாமக்கல் நகரின் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ எடுக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நாமக்கல் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இரு கைகளையும் கூப்பிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தமிழகம் […]

September 1, 2026 Editor
மூலப்பொருட்கள் விலை உயர்வால் லாரி பாடி பில்டிங் தொழில் பாதிப்பு: அரசு உதவ கோரிக்கை. நாமக்கல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் லாரி பாடி பில்டிங் தொழில் பாதிப்பு: அரசு உதவ கோரிக்கை.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி, சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி பாடி பில்டிங் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, நாமக்கல் லாரி பாடி பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் தங்கவேல் தெரிவித்தார். நாமக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் லாரி பாடி பில்டர்ஸ் அசோசியேசனின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

August 31, 2026 Editor
நாமக்கல்லில் ‘இனித் தமிழ் இயக்கம்’ தொடக்கம்: தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க சகாயம் வலியுறுத்தல். நாமக்கல்

நாமக்கல்லில் ‘இனித் தமிழ் இயக்கம்’ தொடக்கம்: தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க சகாயம் வலியுறுத்தல்.

தமிழ் மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், அதனை மீட்டெடுத்து பாதுகாக்கும் நோக்கில் ‘இனித் தமிழ் இயக்கம்’ முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார். நாமக்கல்லில் நடைபெற்ற ‘இனித் தமிழ் இயக்கம்’ சார்பில் தமிழில் கையெழுத்திடும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று சகாயம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருத ஆதிக்கம் காரணமாக தமிழ் மொழியின் பயன்பாடு மங்கியிருந்தது. இருப்பினும், கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளுக்கு இணையான […]

August 30, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 2 பேர் சஸ்பெண்ட். நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 2 பேர் சஸ்பெண்ட்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களை அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 2 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் (பொறுப்பு) தலைமையில், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதுபாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. விலைக்கு மட்டுமே மதுபானங்களை […]

August 28, 2026 Editor
நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிஎன்ஜி கேஸ் நிரப்பும் மையம் திறப்பு. நாமக்கல்

நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிஎன்ஜி கேஸ் நிரப்பும் மையம் திறப்பு.

நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிஎன்ஜி (CNG) கேஸ் நிரப்பும் மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசு பேருந்துகளுக்கு சிஎன்ஜி கேஸ் நிரப்பும் பணியையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தமிழன் பார்த்திபன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 144 அரசு பேருந்துகள் சிஎன்ஜி கேஸ் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளுக்கான […]

August 28, 2026 Editor
நாமக்கல் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. நாமக்கல்

நாமக்கல் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் நேற்று மாலை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷின் அலுவலக அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக […]

August 28, 2026 Editor
நேபாள வெள்ளத்தில் நாமக்கல் ஓய்வு பெற்ற ஆசிரியை மாயம்? உறவினர்கள் கவலை. நாமக்கல்

நேபாள வெள்ளத்தில் நாமக்கல் ஓய்வு பெற்ற ஆசிரியை மாயம்? உறவினர்கள் கவலை.

கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு தொடர்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் அடுத்த சின்னவேப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேனி (65). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் கடந்த 23-ம் தேதி தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் கைலாயம் செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுள்ளார். சென்னை சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் […]

August 26, 2026 Editor
ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.2.75 கோடி மோசடி: ஒருவர் கைது. நாமக்கல்

ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.2.75 கோடி மோசடி: ஒருவர் கைது.

பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு குறைந்த வட்டியில் ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி, ஆவணம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணமாக ரூ.2.75 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருணிடம், மோகனூர் அடுத்த பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (47) அணுகி, குறைந்த வட்டியில் ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக  கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய அருணிடம், கடன் தொகைக்கான […]

August 26, 2026 Editor