32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்

தமிழக அரசு நேர்மையாக செயல்படுகிறது –  செல்ல. ராசாமணி பாராட்டு. Breaking News

தமிழக அரசு நேர்மையாக செயல்படுகிறது – செல்ல. ராசாமணி பாராட்டு.

தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு விதித்துள்ள தடையை வரவேற்பதாகவும், இந்தத் தடையை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பது, கடந்த 10 ஆண்டுகளாக மணல் லாரி உரிமையாளர்கள் முன்வைத்து வந்த […]

July 28, 2026 Editor
மக்கள் குறைதீர் கூட்டம்- 743 மனுக்கள் பெறப்பட்டது; Breaking News

மக்கள் குறைதீர் கூட்டம்- 743 மனுக்கள் பெறப்பட்டது;

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 743 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறை […]

July 27, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் நவீன ஏஎன்பிஆர் கேமராக்கள்; எஸ்.பி. யாதவ் கிரீஷ் அசோக் தகவல் Breaking News

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் நவீன ஏஎன்பிஆர் கேமராக்கள்; எஸ்.பி. யாதவ் கிரீஷ் அசோக் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள ஏஎன்பிஆர் (ANPR – Automatic Number Plate Recognition) நவீன கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இதுதொடர்பாக, நாமக்கல்–சேலம் ரோடு சந்திப்பில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணிகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி. யாதவ் கிரீஷ் அசோக் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் துறை பல்வேறு […]

July 25, 2026 Editor
உயர் அதிகாரிகள் டார்ச்சர் ?. அங்கன்வாடி உதவியாளர் தற்கொலை முயற்சி; வீடியோ வெளியிட்டு பரபரப்பு Breaking News

உயர் அதிகாரிகள் டார்ச்சர் ?. அங்கன்வாடி உதவியாளர் தற்கொலை முயற்சி; வீடியோ வெளியிட்டு பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள செவ்வந்திப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் உதவியாளர் வெண்ணிலா, உயர் அதிகாரிகளின் அணுகுமுறையால் மனவேதனை அடைந்ததாக கூறி அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி மையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த வெண்ணிலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலை முயற்சிக்கு முன்பு சுமார் 9 நிமிடங்கள் கொண்ட […]

July 25, 2026 Editor
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் – பல்கலை துணைவேந்தர் தகவல். Breaking News

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் – பல்கலை துணைவேந்தர் தகவல்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் பி.வி.எஸ்சி கால்நடை மருத்தது படிப்புக்கான அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் என பல்கலை துணை வேந்தர் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில், கல்லூரி ஆண்டு விழா மற்றும் ஹாஸ்டல் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் (பொ) நரேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ […]

June 26, 2026 Editor
திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நாமக்கல்

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செங்கோடு சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு கோலாகலமாக நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு மங்கள திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு வகையான வண்ண மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுகந்த குந்தலாம்பிகை சமேத கைலாசநாதர் எழுந்தருளினார். சிவபூதகண வாத்தியங்கள் முழங்க, ‘ஓம் நமச்சிவாய’ கோஷங்களை எழுப்பியவாறு […]

May 17, 2026 Editor
அரசு துறையில் உண்மையாக உழைப்பவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்- அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை. நாமக்கல்

அரசு துறையில் உண்மையாக உழைப்பவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்- அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை.

பதவியேற்ற பிறகு முதன் முறையாக திருச்செங்கோடு வந்த அமைச்சர் அருண்ராஜ்ஜுக்கு மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, நாமக்கல் எம்.எல்.ஏ திலீப், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகர்  மலர்கொத்து வழங்கி, வரவேற்றனர். தொடர்ந்து, அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் துர்காமூர்த்தி, முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  தமிழக முதல்வர் விஜய் முதல் கையெழுத்தாக, 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம், போதைப்பொருட்கள் தடுப்புப்படை ஆகிய முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்கள். எனவே அரசின் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், அனைத்து துறை அரசு அலுவலர்களும் பணிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான […]

May 17, 2026 Editor
திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர் திருவிழா: ‘அனுமதியின்றி அன்னதானம் வழங்கக் கூடாது’ – ஆர்டிஓ அறிவுறுத்தல்! நாமக்கல்

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர் திருவிழா: ‘அனுமதியின்றி அன்னதானம் வழங்கக் கூடாது’ – ஆர்டிஓ அறிவுறுத்தல்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் நடைபெற்றது. ஆர்டிஓ லெனின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விழாக்கால பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான தேரோட்ட நிகழ்வுகள் பின்வருமாறு நடைபெறவுள்ளன: மே 16 (இன்று): மாலை 4:30 மணிக்கு பத்திரகாளியம்மன் திருத்தேர் இழுத்தல். மே 30: காலை 10:00 மணிக்கு விநாயகர் தேரும், மாலை 4:00 மணிக்கு செங்கோட்டு வேலவர் தேரும் வடம் பிடித்தல். மே 31 – ஜூன் 2: மூன்று நாட்களுக்கு அர்த்தநாரீஸ்வரர் (பெரிய தேர்) திருத்தேர் […]

May 17, 2026 Editor