32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>திருச்செங்கோடு</span>

பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டம்; அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து 3 நாள் போராட்டம் வாபஸ். Breaking News

பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டம்; அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து 3 நாள் போராட்டம் வாபஸ்.

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில், மாற்று வீட்டுமனை வழங்கக் கோரி 3-வது நாளாக பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இலுப்பிலி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நிரம்பி வழிவதால், மழைக்காலங்களில் […]

July 25, 2026 Editor
ஆடி வெள்ளி தரிசனம்… சந்திரகலாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன் ஆன்மீகம்

ஆடி வெள்ளி தரிசனம்… சந்திரகலாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு ஸ்ரீ சந்திரகலாதேவி நிலாபிறை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் சிறப்பு அலங்காரங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை […]

July 25, 2026 Editor
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்- திருச்செங்கோட்டில் பரபரப்பு. Breaking News

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்- திருச்செங்கோட்டில் பரபரப்பு.

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டார விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்டிஓ லெனின் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, கனிமவளத் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை காது […]

July 25, 2026 Editor
மாற்று இடம் கோரி ஏரியில் இறங்கி போராட்டம்: இலுப்பிலி கிராம மக்கள் அவதி Breaking News

மாற்று இடம் கோரி ஏரியில் இறங்கி போராட்டம்: இலுப்பிலி கிராம மக்கள் அவதி

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்பிலி கிராமத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் வசிக்கும் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக மழைநீர் சூழ்ந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சாலைகள் சேதமடைதல், வீடுகள் இடிந்து விழுதல், பாம்புகள் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படும் பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

July 25, 2026 Editor
எலச்சிபாளையம் ஆஸ்பத்திரியில் நர்சுகளை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம். Breaking News

எலச்சிபாளையம் ஆஸ்பத்திரியில் நர்சுகளை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் நர்சுகளை நியமிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகரம் பஞ்சாயத்து பின்புறம் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆஸ்பத்திரியில், ஆதார் மூலம் நோயாளிகளின் வருகைப் பதிவு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை, ஊசி போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பெரும்பாலும் ஒரே நர்சு கவனித்து வருவதால், சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் […]

July 11, 2026 Editor
‘ஊசிகூடபோடமாட்டேங்குறாங்க..!’அமைச்சரிடம்  107 வயதுபாட்டிகண்ணீர்புகார் Breaking News

‘ஊசிகூடபோடமாட்டேங்குறாங்க..!’அமைச்சரிடம்  107 வயதுபாட்டிகண்ணீர்புகார்

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, 107 வயது மூதாட்டி கண்ணீர் மல்க அளித்த புகாரும், ஆஸ்பத்திரியில் ஒரு மாதமாக பிரசவம் நடைபெறாததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், சிறிய பிரச்னைகளுக்குக் கூட திருச்செங்கோடு மற்றும் சேலம் ஜிஹெச் களுக்கு  அனுப்பி வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சுகப்பிரசவங்களை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. […]

June 18, 2026 Editor
70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை Breaking News

70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை

சென்னை / திருச்செங்கோடு: திருச்செங்கோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். திருச்செங்கோடு தொகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளை காவிரி உபரி நீரால் நிரப்பும் வகையில், காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் 70 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது. பல தேர்தல்களில் இந்தத் […]

May 20, 2026 Editor
வேலுமணியுடன் கைகோர்த்த தங்கமணி ‘டிஸ்மிஸ்’! எடப்பாடிக்கு ‘செக்’? மாவட்ட நிர்வாகிகளை வளைக்கப் பாயும் ‘கரன்சி’ வலை! திருச்செங்கோடு

வேலுமணியுடன் கைகோர்த்த தங்கமணி ‘டிஸ்மிஸ்’! எடப்பாடிக்கு ‘செக்’? மாவட்ட நிர்வாகிகளை வளைக்கப் பாயும் ‘கரன்சி’ வலை!

அதிமுகவில் நிலவி வந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிழலாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடியைப் பிரிந்து வேலுமணியுடன் கைகோர்த்துள்ள தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் இழுக்கத் திட்டமிட்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் என அசைக்க முடியாத சக்தியாக இருந்த தங்கமணி, சமீபகாலமாக கட்சித் தலைமையுடன் […]

May 17, 2026 Editor
பள்ளி, பஸ் நிலையம் அருகே இயங்கிய டாஸ்மாக் கடை அதிரடி மூடல்: திருச்செங்கோடு மக்கள் நிம்மதி திருச்செங்கோடு

பள்ளி, பஸ் நிலையம் அருகே இயங்கிய டாஸ்மாக் கடை அதிரடி மூடல்: திருச்செங்கோடு மக்கள் நிம்மதி

திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அரசு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் அதிரடியாகப் பூட்டினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, விதிமீறலாகச் செயல்படும் கடைகளைக் கண்டறிந்து அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டவுன் பகுதியில் […]

May 17, 2026 Editor
உடனடி செய்திகள்