32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு

போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் குறித்து அவதூறு பதிவு: காவல் நிலையத்தில் புகார். திருச்செங்கோடு

போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் குறித்து அவதூறு பதிவு: காவல் நிலையத்தில் புகார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். திருமண நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்குள் செல்போன் மற்றும் கேமராக்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், திருமண நிகழ்வுகளை பதிவு செய்யச் செல்லும் போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான பதிவுகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. பெயர் குறிப்பிடாமல், ஊர் பெயரை மட்டும் குறிப்பிட்டு செயல்படும் முகநூல் […]

September 2, 2026 Editor
திருச்செங்கோட்டில் தூய்மை பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் தூய்மை பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 6-வது வார்டு சேலம் ரோடு முனியப்பன் கோயில் அருகே வசித்து வருபவர் ஆனந்தகுமார் (55). இவர் தனது பகுதியில் தூய்மை பணிக்கு வரும் பணியாளர்களிடம் அடிக்கடி குறை கூறி வந்ததாக தெரிகிறது. மேலும், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் புகார் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை ஆனந்தகுமார் வீட்டின் அருகே உள்ள சாக்கடையை தூய்மை செய்வதற்காக நகராட்சி தூய்மை பணியாளர் வடிவேலு சென்றுள்ளார். சாக்கடை அடைப்பு குறித்து […]

September 2, 2026 Editor
திருச்செங்கோட்டில் கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை: குடும்பத் தகராறால் சோகம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை: குடும்பத் தகராறால் சோகம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கணவனின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு இருவரும் தனித்தனியாக செல்போனில் வீடியோ பதிவு செய்து வைத்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்செங்கோடு ஏ.கே.இ. ரோடு, சக்தி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நித்யானந்தம் (41). ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி தேன் தமிழ்ச்செல்வி (37), தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி […]

August 31, 2026 Editor
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்: அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதி. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்: அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதி.

அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமில், போதிய இருக்கை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களது உதவியாளர்களுடன் பங்கேற்றனர். முகாமுக்கு வந்தவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை […]

August 31, 2026 Editor
திருச்செங்கோட்டில் பழமையான வணிக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சேதம். 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் பழமையான வணிக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சேதம். 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் ரோட்டில் டிசிஎம்எஸ் எதிரே உள்ள பழமையான வணிக கட்டிடத்தின் கீழ்பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தில் தங்கியிருந்த 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். வேலூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு மாடி கொண்ட பழமையான வணிக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் முன்பகுதியில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும், பின்பகுதி மற்றும் மேல்மாடியில் மேன்சனும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த மேன்சனில் வடமாநிலங்களைச் சேர்ந்த […]

August 28, 2026 Editor
திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன குடோனில் தீ விபத்து -5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன குடோனில் தீ விபத்து -5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள இருசக்கர வாகன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் என 7 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. திருச்செங்கோடு நாமக்கல் ரோட்டில் பச்சையம்மன் கோயில் எதிரே பாலச்சந்தர் (44) என்பவருக்கு சொந்தமான கவுண்டர் அண்ட் கோ நிறுவனத்தின் இருசக்கர வாகன குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 30-க்கும் மேற்பட்ட பேட்டரி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. […]

August 28, 2026 Editor
திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.4.33 கோடியில் குடியிருப்புகள்- காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய். திருச்செங்கோடு

திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.4.33 கோடியில் குடியிருப்புகள்- காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.

திருச்செங்கோடு சாலப்பாளையம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீயணைப்பு துறை பணியாளர்களுக்காக ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 குடியிருப்புகள் திறக்கப்பட்டன. திருச்செங்கோடு நகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட சாலப்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் நிலைய அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு நிலைய வளாகத்திலேயே குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள சுமார் 56 சென்ட் இடம் தேர்வு […]

August 27, 2026 Editor
திருச்செங்கோடு நகராட்சியில் 4 வகையாக கழிவுகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு. திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகராட்சியில் 4 வகையாக கழிவுகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு.

திருச்செங்கோடு நகராட்சியில் வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, வீடுகளில் சேகரமாகும் கழிவுகளை ஈரக்கழிவு, மக்காத கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் வீட்டு அபாயகரமான கழிவு என நான்கு வகைகளாக பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதன்படி, ஈரக்கழிவுகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத கழிவுகளை ஊதா நிற தொட்டியிலும், சுகாதாரக் […]

August 27, 2026 Editor
விஜயகாந்த் பிறந்தநாள்: நாமக்கல் வடக்கு மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம். திருச்செங்கோடு

விஜயகாந்த் பிறந்தநாள்: நாமக்கல் வடக்கு மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் வடக்கு மாவட்டம் முழுவதும் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில், ஆகஸ்ட் 25-ம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், […]

August 26, 2026 Editor
மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட சங்கம் கோரிக்கை. திருச்செங்கோடு

மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட சங்கம் கோரிக்கை.

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்படுவது போல் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் பாதுகாவலர்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயண வசதி வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும், திருச்செங்கோடு பகுதியில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், அரசு பஸ்களில் […]

August 25, 2026 Editor