32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், செல்போனை பார்த்தபடி சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் இருந்து செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் உள்ள கே.எஸ்.ஆர். கல்லூரியில் படித்து வரும் மணிகண்டன், கல்லூரி முடிந்து பேருந்தில் வந்து கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். பின்னர் செல்போனை பார்த்தபடி வீட்டை நோக்கி நடந்து சென்றபோது, […]

September 10, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றி அழிப்பு: ஆட்சியர் மதுபாலன் தகவல் திருச்செங்கோடு

நாமக்கல் மாவட்டத்தில் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றி அழிப்பு: ஆட்சியர் மதுபாலன் தகவல்

இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் வட்டம் கொன்னையாறு கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தொடங்கி […]

September 9, 2026 Editor
திருச்செங்கோடு அருகே 4 மாணவிகள் உயிரிழந்த விபத்து: தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே 4 மாணவிகள் உயிரிழந்த விபத்து: தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சக்கராம்பாளையம் பிரிவு பகுதியில் 4 மாணவிகள் உயிரிழந்த சாலை விபத்து தொடர்பாக, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை எலச்சிபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 மாணவிகள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் 4 மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, விபத்து குறித்து எலச்சிபாளையம் […]

September 4, 2026 Editor
எலச்சிபாளையம் விபத்து நடந்த பகுதியில் சாலை தடுப்புகள் அமைப்பு. திருச்செங்கோடு

எலச்சிபாளையம் விபத்து நடந்த பகுதியில் சாலை தடுப்புகள் அமைப்பு.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் பிரிவு பகுதியில் நேற்று மாலை தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற பகுதி சாலை வளைவாக இருப்பதால், சக்கராம்பாளையம் பிரிவு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வரும் வாகனங்கள், அந்த வழியாக வேகமாக வரும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சரியாக தெரிவதில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாகவும், விபத்துகளை […]

September 4, 2026 Editor
திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழப்பு: தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் விஜய் அறிவிப்பு. தமிழகம்

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழப்பு: தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் விஜய் அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நேற்று (செப்.3) நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கொன்னையார் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுபிதா (19), தனது சகோதரிகளான நிவேதா (17), தனுஸ்ரீ (13) மற்றும் உறவினரான அபிநயா (12) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றபோது, தனியார் கல்லூரி பேருந்து […]

September 4, 2026 Editor
திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழப்பு: அமைச்சர் அருண்ராஜ் இரங்கல். திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழப்பு: அமைச்சர் அருண்ராஜ் இரங்கல்.

எலச்சிபாளையம் அருகே சக்கராம்பாளையம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கல்லூரி மாணவி சுபிதா கலைச்செல்வி, பள்ளி மாணவிகள் நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக குடும்பநலத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்செங்கோடு அருகே […]

September 4, 2026 Editor
திருச்செங்கோடு காவல் உட்கோட்ட ஏ.எஸ்.பி.யாக அஸ்வினி பொறுப்பேற்பு. திருச்செங்கோடு

திருச்செங்கோடு காவல் உட்கோட்ட ஏ.எஸ்.பி.யாக அஸ்வினி பொறுப்பேற்பு.

திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தின் புதிய ஏ.எஸ்.பி ஆக அஸ்வினி பொறுப்பேற்றுக் கொண்டார். பி.இ. பட்டதாரியான அஸ்வினி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியானார். தொடர்ந்து திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பயிற்சி பெற்றார். பயிற்சியை நிறைவு செய்த அவர், முதன்முறையாக ஏ.எஸ்.பி ஆக திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் பொறுப்பேற்றுள்ளார். திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் இதுவரை குரூப் 1 கேடரில் உள்ள டிஎஸ்பிக்கள் மட்டுமே பதவி வகித்து வந்த நிலையில் முதல் முறையாக ஐபிஎஸ் […]

September 4, 2026 Editor
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் – விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம். திருச்செங்கோடு

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் – விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்குவதுடன், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 9-வது மாநாடு திருச்செங்கோடு சூரியம்பாளையம் செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில் உள்ள தோழர் பி. செங்கோடன் நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. துரைசாமி தலைமை வகித்தார். மூத்த […]

September 4, 2026 Editor
திருச்செங்கோடு அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழப்பு. Breaking News

திருச்செங்கோடு அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழப்பு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்தும், மொபட்டும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் போயர் தெரு பகுதியைச் சேர்ந்த சேகர்–அமுதா தம்பதியரின் மகள்கள் சுபிதா கலைச்செல்வி (19), நிவேதா (16), தனுஸ்ரீ (13). இவர்களது உறவினரான ரமேஷ்பாபு–வசந்தா தம்பதியரின் மகள் அபிநயா (11). இதில் சுபிதா கலைச்செல்வி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் இரண்டாம் […]

September 4, 2026 Editor
திருச்செங்கோட்டில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 29 வயது கட்டிடத் தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்செங்கோடு நகரப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், சிறுமி வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சரவணன் (29) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட […]

September 2, 2026 Editor