
எலச்சிபாளையம் அருகே சக்கராம்பாளையம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் கல்லூரி மாணவி சுபிதா கலைச்செல்வி, பள்ளி மாணவிகள் நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக குடும்பநலத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்செங்கோடு அருகே நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுபிதா கலைச்செல்வி, நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த துயரமான நேரத்தில் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாலை விபத்து தொடர்பாக எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.