32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Editor

ராசிபுரம் அருகே ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக புகார்: ஜேசிபி, டிராக்டர் சிறைபிடிப்பு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக புகார்: ஜேசிபி, டிராக்டர் சிறைபிடிப்பு.

ராசிபுரம் அருகே பூசாரிபாளையத்தில் உள்ள ஏரியில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதாகக் கூறி, ஜேசிபி இயந்திரம் மற்றும் மண் ஏற்றிச் சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் அடுத்த பூசாரிபாளையத்தில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மண் வெட்டி எடுக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஏரியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மண் […]

August 28, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 2 பேர் சஸ்பெண்ட். நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 2 பேர் சஸ்பெண்ட்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களை அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 2 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் (பொறுப்பு) தலைமையில், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதுபாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. விலைக்கு மட்டுமே மதுபானங்களை […]

August 28, 2026 Editor
நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிஎன்ஜி கேஸ் நிரப்பும் மையம் திறப்பு. நாமக்கல்

நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிஎன்ஜி கேஸ் நிரப்பும் மையம் திறப்பு.

நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிஎன்ஜி (CNG) கேஸ் நிரப்பும் மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசு பேருந்துகளுக்கு சிஎன்ஜி கேஸ் நிரப்பும் பணியையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தமிழன் பார்த்திபன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 144 அரசு பேருந்துகள் சிஎன்ஜி கேஸ் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளுக்கான […]

August 28, 2026 Editor
திருச்செங்கோட்டில் பழமையான வணிக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சேதம். 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் பழமையான வணிக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சேதம். 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் ரோட்டில் டிசிஎம்எஸ் எதிரே உள்ள பழமையான வணிக கட்டிடத்தின் கீழ்பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தில் தங்கியிருந்த 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். வேலூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு மாடி கொண்ட பழமையான வணிக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் முன்பகுதியில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும், பின்பகுதி மற்றும் மேல்மாடியில் மேன்சனும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த மேன்சனில் வடமாநிலங்களைச் சேர்ந்த […]

August 28, 2026 Editor
திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன குடோனில் தீ விபத்து -5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன குடோனில் தீ விபத்து -5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள இருசக்கர வாகன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் என 7 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. திருச்செங்கோடு நாமக்கல் ரோட்டில் பச்சையம்மன் கோயில் எதிரே பாலச்சந்தர் (44) என்பவருக்கு சொந்தமான கவுண்டர் அண்ட் கோ நிறுவனத்தின் இருசக்கர வாகன குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 30-க்கும் மேற்பட்ட பேட்டரி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. […]

August 28, 2026 Editor
நாமக்கல் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. நாமக்கல்

நாமக்கல் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் நேற்று மாலை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷின் அலுவலக அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக […]

August 28, 2026 Editor
திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.4.33 கோடியில் குடியிருப்புகள்- காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய். திருச்செங்கோடு

திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.4.33 கோடியில் குடியிருப்புகள்- காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.

திருச்செங்கோடு சாலப்பாளையம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீயணைப்பு துறை பணியாளர்களுக்காக ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 குடியிருப்புகள் திறக்கப்பட்டன. திருச்செங்கோடு நகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட சாலப்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் நிலைய அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு நிலைய வளாகத்திலேயே குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள சுமார் 56 சென்ட் இடம் தேர்வு […]

August 27, 2026 Editor
திருச்செங்கோடு நகராட்சியில் 4 வகையாக கழிவுகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு. திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகராட்சியில் 4 வகையாக கழிவுகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு.

திருச்செங்கோடு நகராட்சியில் வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, வீடுகளில் சேகரமாகும் கழிவுகளை ஈரக்கழிவு, மக்காத கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் வீட்டு அபாயகரமான கழிவு என நான்கு வகைகளாக பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதன்படி, ஈரக்கழிவுகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத கழிவுகளை ஊதா நிற தொட்டியிலும், சுகாதாரக் […]

August 27, 2026 Editor
ஜேடர்பாளையம் படுகை அணையில் எம்.பி மாதேஸ்வரன் உண்ணாவிரதம். பரமத்திவேலூர்

ஜேடர்பாளையம் படுகை அணையில் எம்.பி மாதேஸ்வரன் உண்ணாவிரதம்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. படுகை அணை நுழைவாயில் எதிரே நடைபெறும் போராட்டத்திற்கு நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமை வகித்து வருகிறார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால், அதன் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக […]

August 27, 2026 Editor
நேபாள வெள்ளத்தில் நாமக்கல் ஓய்வு பெற்ற ஆசிரியை மாயம்? உறவினர்கள் கவலை. நாமக்கல்

நேபாள வெள்ளத்தில் நாமக்கல் ஓய்வு பெற்ற ஆசிரியை மாயம்? உறவினர்கள் கவலை.

கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு தொடர்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் அடுத்த சின்னவேப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேனி (65). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் கடந்த 23-ம் தேதி தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் கைலாயம் செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுள்ளார். சென்னை சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் […]

August 26, 2026 Editor