32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Editor

ராசிபுரத்தில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல். ராசிபுரம்

ராசிபுரத்தில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்.

ராசிபுரம் நகரில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜாகீர் உசேன் சாலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு இரவு வீட்டில் தூங்கச் சென்றுள்ளனர். நள்ளிரவில் சுமார் […]

August 25, 2026 Editor
நாமக்கல்லில் தானியங்கி அபராத முறை அமல்: ஏஐ கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு. நாமக்கல்

நாமக்கல்லில் தானியங்கி அபராத முறை அமல்: ஏஐ கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் வகையில் Intelligent Traffic Management System மற்றும் ANPR கேமராக்களுடன் கூடிய Automated Challan System இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. நாமக்கல் சேலம் ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கண்காணிப்பு முறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., முதற்கட்டமாக சேலம் ரோடு சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள ANPR கேமராக்கள் மூலம் வாகனங்களின் […]

August 25, 2026 Editor
கல் குவாரிகளின் எல்லை அளவீடுகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை. நாமக்கல்

கல் குவாரிகளின் எல்லை அளவீடுகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை.

எலச்சிபாளையம் அருகே செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களின் எல்லை அளவீடுகளை அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவில்லை எனக்கூறி, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம் இளையாம்பாளையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஸர்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களை […]

August 25, 2026 Editor
குமாரபாளையத்தில் கனமழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்; வாகன ஓட்டிகள் அவதி. குமாரபாளையம்

குமாரபாளையத்தில் கனமழை: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்; வாகன ஓட்டிகள் அவதி.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். குமாரபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை, காவேரி நகர், குப்பாண்டபாளையம், […]

August 24, 2026 Editor
இன்று முதல் அமல், ஹெல்மெட் இல்லாமல் இனி வாகனம் ஓட்டினால் ஆன்லைனில் அபராதம். நாமக்கல்

இன்று முதல் அமல், ஹெல்மெட் இல்லாமல் இனி வாகனம் ஓட்டினால் ஆன்லைனில் அபராதம்.

நாமக்கல் மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஏஐ கேமராக்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன. இதன் மூலம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் சாலை – திருச்செங்கோடு சாலை சந்திப்பில் கடந்த மாதம் 4 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு ANPR (Automatic […]

August 24, 2026 Editor
திருச்செங்கோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை: எம்.எல்.ஏ. அலுவலகத்தை சூழ்ந்த மழைநீர். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை: எம்.எல்.ஏ. அலுவலகத்தை சூழ்ந்த மழைநீர்.

திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்செங்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழையால் நகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, திருச்செங்கோடு எம்.எல்.ஏ. […]

August 24, 2026 Editor
திருச்செங்கோடு மலைக்கோயிலில், ஆதி நாகேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம். ஆன்மீகம்

திருச்செங்கோடு மலைக்கோயிலில், ஆதி நாகேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஆதி நாகேஸ்வரருக்கு 25-வது ஆண்டாக 108 பால்குட அபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு கூட்டு வழிபாடு நடைபெற்றது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னதாக ராஜகோபுரத்தில் இருந்து 7 குழந்தைகளை அழைத்து வரும் ஸ்ரீ கன்னிமார் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் 108 பால்குடங்களை எடுத்து வந்தனர். பின்னர் ஆதி நாகேஸ்வரருக்கு 108 பால்குடங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், […]

August 24, 2026 Editor
மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு தடை: திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். திருச்செங்கோடு

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு தடை: திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடுவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை கண்டித்து, திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் பணியாற்றிய வட்டாட்சியர், இடதுசாரி […]

August 23, 2026 Editor
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 20 புதிய நர்சுகள்: ரூ.15 கோடியில் கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் – அமைச்சர் அருண்ராஜ் தகவல். திருச்செங்கோடு

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 20 புதிய நர்சுகள்: ரூ.15 கோடியில் கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் – அமைச்சர் அருண்ராஜ் தகவல்.

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 20 புதிய நர்சுகள் நியமிக்கப்பட உள்ளதாகவும், வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23.75 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு இரட்டை கதவு ஆட்டோகிளேவ், அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்கோ […]

August 22, 2026 Editor
நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம். நாமக்கல்

நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம்.

நாமக்கல் மாநகராட்சி, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து, தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் முகாமை நாமக்கல்லில் நடத்தின. நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்எல்ஏ திலீப் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ரேபிஸ் நோய் பரவலை தடுப்பதுடன், தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைக்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி […]

August 22, 2026 Editor