32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

Editor Published: August 28, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் நேற்று மாலை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷின் அலுவலக அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சோதனை நடைபெற்றபோது மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், அவரை வரவழைத்து அவரது அறையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது, எதற்காக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது, அந்தப் பணம் லஞ்சமாக பெறப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author