32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

கொல்லிமலையில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுத் தடை.

Editor Published: September 30, 2026 2 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் முழுத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அக்டோபர் 2 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.

தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்வோருக்கு முதல் முறை ரூ.25,000, இரண்டாம் முறை ரூ.50,000, மூன்றாம் முறை ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

பெரிய வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளிக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் முறையே ரூ.10,000, ரூ.15,000, ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.

மளிகை மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.5,000 எனவும், சிறு வியாபாரிகளுக்கு ரூ.100, ரூ.200, ரூ.500 எனவும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொல்லிமலை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கொல்லிமலைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வராமல் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

About The Author