32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

தனியார் கல்லூரி மாணவர்களின் கோரிக்கை மாநாடு – திருச்செங்கோட்டில் பேரணி

Editor Published: September 27, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தனியார் கல்லூரி மாணவர்களின் கோரிக்கை மாநாடு மற்றும் பேரணி நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். முன்னதாக, கட்சி அலுவலகத்தில் இருந்து தனியார் கல்லூரி மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

பேரணியில் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும், தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், மாணவர் விடுதி மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும், தரமான உணவு வழங்க வேண்டும், மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும், தனியார் கல்லூரிகளில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாநாட்டில், தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும், பேராசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும், மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் பேசிய இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், தனியார் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தனியார் கல்லூரி விடுதிகளில் தரமான உணவு வழங்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பல்கலைக்கழகங்கள் தொடங்குவது தொடர்பான நெறிமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

About The Author