32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோட்டில், தவெக சார்பில் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள் அனுசரிப்பு.

Editor Published: August 20, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள் திருச்செங்கோட்டில் அனுசரிக்கப்பட்டது. திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தவெக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர்கள் இப்ராஹிம், நாகராஜ், ஒன்றியச் செயலாளர்கள் சக்திவேல், உதயகுமார், குணசேகரன், விக்னேஷ், மல்லசமுத்திரம் கந்தசாமி, கிருஷ்ணன், தனபால், பிரசாந்த், மல்லசமுத்திரம் முத்துசாமி, வழக்கறிஞர் சதீஷ்குமார், செல்வகுமரன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சக்தி பரமசிவம், பிரகதீஸ்வரன் உள்ளிட்டோரும் பங்கேற்று ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒண்டிவீரனின் தியாகத்தையும், சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.

About The Author