32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்:முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்.

Editor Published: August 12, 2026 1 நிமிட வாசிப்பு தமிழகம்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

🔴 LIVE COVERAGE / நேரலை
Auto-refreshing every 30s
4.15 AM

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்:முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்.

நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் தீர்மானத்தை முன்மொழிந்த அமைச்சர் அருண்ராஜ், மருத்துவக் கல்வி அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்றும், பள்ளியில் 12 ஆண்டுகள் கற்ற கல்வியை விட ஒரே நாளில் நடைபெறும் தேர்வு ஒரு மாணவரின் திறமையை முழுமையாக மதிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வு முறையால் தனியார் பயிற்சி மையங்களில் பயிலும் வசதி படைத்த மாணவர்கள் அதிகம் பயன்பெறுவதாகவும், கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் அதே அளவிலான பயிற்சியை பெற முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய மத்திய அரசு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநில உரிமையை மதிக்கும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டப்பேரவையின் ஒருமித்த குரலை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

About The Author

உடனடி செய்திகள்