32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

Editor Published: August 14, 2026 1 நிமிட வாசிப்பு ஆன்மீகம்
எழுத்து அளவு:

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, ஒரு லட்சம் வெற்றிலைகளைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வெற்றிலை அலங்காரத்தில் அம்மனை தரிசனம் செய்வதால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதையடுத்து ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

About The Author