32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல்லில் தர்ணா; காந்தியவாதி ரமேஷ் போராட்டம் நாமக்கல்

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல்லில் தர்ணா; காந்தியவாதி ரமேஷ் போராட்டம்

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை சப்–டிவிஷன் செய்து தரக்கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, காந்தியவாதி ரமேஷ் வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். குறிப்பாக, பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை […]

August 7, 2026 Editor
நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நாமக்கல்

நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் ஒன்றியக் கிளை சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஆசிரியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு: நாமக்கல் ஒன்றியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் மாற்றுப்பணி ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கைத் தடைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், கூட்டு இணையமர்வு கூட்டம் நடத்த வேண்டும். பதிநகர் மற்றும் மாருதிநகர் பள்ளிகளுக்கு […]

August 7, 2026 Editor
அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம் நாமக்கல்

அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம்

இந்திய அஞ்சல் துறையின் நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில், 30.06.2026 உடன் முடிவடையும் அரையாண்டிற்கான அஞ்சல் துறை ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம் மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக (வீடியோ கான்பரன்சிங்) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியர்கள், தங்களது குறைகளை “Regional Level Pension Adalat” என்ற குறிப்புடன் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட அஞ்சல் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மனுக்கள் கோட்ட அலுவலகத்திற்கு […]

August 7, 2026 Editor
நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்; Breaking News

நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்;

நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில், காந்திவாதி ரமேஷ் தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அவர்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக வளாகத்தில் திடீரென போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க […]

August 7, 2026 Editor
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நாமக்கல்லில் அமைதிப் பேரணி Breaking News

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நாமக்கல்லில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, நாமக்கல்லில் இன்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அண்ணா சிலையில் இருந்து காலை 8 மணிக்கு தொடங்கிய அமைதிப் பேரணி, பரமத்தி ரோட்டில் உள்ள கருணாநிதி சிலை வரை நடைபெற்றது. பின்னர், கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் சி. மணிமாறன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் […]

August 7, 2026 Editor
ஊரின் நடுவே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு; எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு Breaking News

ஊரின் நடுவே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு; எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு

நாமக்கல் மாவட்டம், பரளி அருகே நல்லையம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் கோழிப்பண்ணை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) மனு அளித்தனர். மனுவில், நல்லையம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், கிராமத்தின் நடுப்பகுதியில் மாரியம்மன் கோயில், குலதெய்வக் கோயில், ஊர்க் கிணறு மற்றும் விவசாயக் கிணறுகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

August 6, 2026 Editor
5 ஏக்கர் விவசாய நிலம் மோசடியாக அபகரிப்பு? – எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி மனு Breaking News

5 ஏக்கர் விவசாய நிலம் மோசடியாக அபகரிப்பு? – எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி மனு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பச்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயியும், ஜவ்வரிசி ஆலை உரிமையாளருமான செங்கோட்டையன், தனது 5 ஏக்கர் விவசாய நிலம் மோசடி மூலம் அபகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, குடும்பத்துடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தொழில் தேவைக்காக திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தை அடமானமாக வைத்து ரூ.20 லட்சம் கடன் பெற்றதாகவும், அந்த நிலம் இதுவரை தங்களது அனுபவத்திலேயே இருந்து வருவதாகவும் […]

August 6, 2026 Editor
வல்வில் ஓரி விழா நிறைவு: 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார். Breaking News

வல்வில் ஓரி விழா நிறைவு: 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில், மாவட்ட கலெக்டர் மதுபாலன் மற்றும் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் வல்வில் ஓரியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி, பல்வேறு அரசு […]

August 4, 2026 Editor
பு.தி.க தலைவர் ராஜ்  வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Breaking News

பு.தி.க தலைவர் ராஜ் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி அரசு விழாவில், புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜ், வல்வில் ஓரி மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாமக்கல் மாவட்டத்தை ஆண்ட குறுநில மன்னரும், கடையேழு வள்ளல்களில் ஒருவருமான வல்வில் ஓரி க்கு ஆண்டு தோறும் அரசு விழா ஆடி 18-ஐ முன்னிட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் […]

August 4, 2026 Editor
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி Breaking News

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு. ராஜேஸ்வரி தலைமை வகித்து, போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஈரநிலம் அறக்கட்டளையின் நிறுவனர் ந. தமிழரசன், போதைப்பொருட்களின் தீமைகள், அவற்றால் ஏற்படும் சமூக, உடல் மற்றும் மனநல பாதிப்புகள், மேலும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை விளக்கும் ஓவியங்களை காட்சிப்படுத்தி, […]

July 28, 2026 Editor