32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தக் கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம். நாமக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தக் கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக […]

August 25, 2026 Editor
நாமக்கல்லில் ஆக.28-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். நாமக்கல்

நாமக்கல்லில் ஆக.28-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம்.

தனியார் நிறுவனங்களும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலைநாடுநர்களும் நேரடியாக சந்திக்கும் வகையில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. 10-ம் […]

August 25, 2026 Editor
நாமக்கல்லில் தானியங்கி அபராத முறை அமல்: ஏஐ கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு. நாமக்கல்

நாமக்கல்லில் தானியங்கி அபராத முறை அமல்: ஏஐ கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் வகையில் Intelligent Traffic Management System மற்றும் ANPR கேமராக்களுடன் கூடிய Automated Challan System இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. நாமக்கல் சேலம் ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கண்காணிப்பு முறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., முதற்கட்டமாக சேலம் ரோடு சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள ANPR கேமராக்கள் மூலம் வாகனங்களின் […]

August 25, 2026 Editor
கல் குவாரிகளின் எல்லை அளவீடுகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை. நாமக்கல்

கல் குவாரிகளின் எல்லை அளவீடுகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை.

எலச்சிபாளையம் அருகே செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களின் எல்லை அளவீடுகளை அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவில்லை எனக்கூறி, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம் இளையாம்பாளையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஸர்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களை […]

August 25, 2026 Editor
இன்று முதல் அமல், ஹெல்மெட் இல்லாமல் இனி வாகனம் ஓட்டினால் ஆன்லைனில் அபராதம். நாமக்கல்

இன்று முதல் அமல், ஹெல்மெட் இல்லாமல் இனி வாகனம் ஓட்டினால் ஆன்லைனில் அபராதம்.

நாமக்கல் மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஏஐ கேமராக்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன. இதன் மூலம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் சாலை – திருச்செங்கோடு சாலை சந்திப்பில் கடந்த மாதம் 4 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு ANPR (Automatic […]

August 24, 2026 Editor
நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம். நாமக்கல்

நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம்.

நாமக்கல் மாநகராட்சி, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து, தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் முகாமை நாமக்கல்லில் நடத்தின. நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்எல்ஏ திலீப் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ரேபிஸ் நோய் பரவலை தடுப்பதுடன், தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைக்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி […]

August 22, 2026 Editor
அரசு கார் வேண்டாம் என கூறும் எம்எல்ஏக்களுக்கு அந்த நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்க்க வேண்டும். நாமக்கல்

அரசு கார் வேண்டாம் என கூறும் எம்எல்ஏக்களுக்கு அந்த நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்க்க வேண்டும்.

அரசு கார் தேவையில்லை என தெரிவிக்கும் எம்எல்ஏக்களுக்கு, காருக்காக ஒதுக்கப்படும் நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், […]

August 22, 2026 Editor
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே முட்டை வடிவ அலங்கார ரவுண்டானா. நாமக்கல்

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே முட்டை வடிவ அலங்கார ரவுண்டானா.

நாமக்கல் முதலைப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகே, மாநகராட்சி சார்பில் முட்டை வடிவ அலங்காரத்துடன் கூடிய போக்குவரத்து ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, நகருக்குச் செல்லும் பிரதான சாலையில், நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் இரண்டு சாலைகளுக்கு நடுவே ரவுண்டானா அமைக்கப்படுகிறது. நாமக்கல் நகரின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள இப்பகுதியில், வெளியூர்களில் இருந்து வருபவர்களை வரவேற்கும் வகையிலும், […]

August 22, 2026 Editor
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி மோசடி: தனியார் கல்லூரி முதல்வரின் கூட்டாளியை கைது செய்ய சென்னை விரைந்த நாமக்கல் போலீஸ். நாமக்கல்

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி மோசடி: தனியார் கல்லூரி முதல்வரின் கூட்டாளியை கைது செய்ய சென்னை விரைந்த நாமக்கல் போலீஸ்.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி முதல்வரின் கூட்டாளியை கைது செய்வதற்காக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னை விரைந்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). பல்வேறு தனியார் கல்லூரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றிய இவர், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக தனது நண்பர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையைச் சேர்ந்த அரசு […]

August 22, 2026 Editor
நாமக்கல், நல்லிபாளையம் ஏரி தூர்வாரும் பணி தொடக்கம். நாமக்கல்

நாமக்கல், நல்லிபாளையம் ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டன. ‘மிளிரும் நாமக்கல்’ அமைப்பு சார்பில் நல்லிபாளையம் ஏரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் சி.எஸ்.திலீப், மாநகராட்சி ஆணையாளர் சண்.செல்வபாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஏரியை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் ‘மிளிரும் நாமக்கல்’ அமைப்பின் தலைவர் வி.சத்தியமூர்த்தி, […]

August 22, 2026 Editor