திருச்செங்கோடு
போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் குறித்து அவதூறு பதிவு: காவல் நிலையத்தில் புகார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். திருமண நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்குள் செல்போன் மற்றும் கேமராக்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், திருமண நிகழ்வுகளை பதிவு செய்யச் செல்லும் போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான பதிவுகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. பெயர் குறிப்பிடாமல், ஊர் பெயரை மட்டும் குறிப்பிட்டு செயல்படும் முகநூல் […]