குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாணார்பாளையம் பகுதியில் நீரோடை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான நிலத்திற்குச் செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாணார்பாளையம் பகுதியில் குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குச் செல்லும் பாதை ஓடை வழியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாதையை நீண்ட காலமாக அப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் தங்களது […]